ஊருக்கு கோயில் எப்படியோ, அரசு பள்ளியும் ரொம்ப முக்கியம் - விழாவில் சசிகுமார் மாஸ் பேச்சு

By subhashini · 17/1/2025

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலிலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வருந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு சசி குமார் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘நந்தன்’. இந்தப் படத்தை இரா. சரவணன் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே ‘உடன்பிறப்பு’ என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தன் படம்:

மேலும், நந்தன் படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பட்டியல் இன மக்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் போது என்னவெல்லாம் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்திருக்கிறார். இந்த படத்தை பார்த்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் பாராட்டி இருந்தார்கள்.

விழாவில் சமுத்திரக்கனி:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சசிகுமார் கலந்து கொண்டிருந்தார். அப்போது அந்த விழாவில் சசிகுமார், அரசு பள்ளியை மேம்படுத்த எடுத்த முயற்சிகளைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டேன். இதற்காக தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரசு பள்ளியை மேம்படுத்தி மாணவர்களுக்கு ஆங்கில மொழியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

https://www.youtube.com/watch?v=MkF3WNG6rPo

அரசு பள்ளிகள் பற்றி சொன்னது:

அரசு பள்ளி அனைத்து ஆசிரியர்களும், அங்கு பணியாற்றும் பணியாளர்கள் அனைவருமே திறமையானவர்களை உருவாக்க தங்களுடைய உழைப்பை தருகிறார்கள். இது உங்கள் ஊர், உங்கள் பள்ளி. அதனை கைவிடக்கூடாது. அரசு பள்ளிக்கு உதவி செய்த அனைவருக்கும் விருது வழங்குவது தான் அவர்களுக்கு செய்யும் நன்றி. அரசு பள்ளியை நடத்துவதற்கு அரசை மட்டும் நம்பாமல் பொதுமக்களும் நிதி வழங்கி உதவ வேண்டும். ஒரு ஊருக்கு கோயில் எவ்வளவு அவசியமோ அதேபோல் பள்ளியும் ரொம்ப ரொம்ப முக்கியம்.

சசிகுமார் நடிக்கும் படங்கள்:

அரசு பள்ளிக்கு குறைவான மாணவர்கள் படிக்க வரும் இந்த காலகட்டத்தில் அதை மேம்படுத்த தங்களது உழைப்பை தரும் அனைவருக்குமே என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என்று கூறி இருக்கிறார்.
தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு இந்த மாதமே முடிவடைந்து விடும். இதை அடுத்து சசிகுமார் அவர்கள் எவிடன்ஸ், பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இந்த வருடத்தில் இவர் மீண்டும் இயக்குனராக கம்பேக் கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full