இது புது இயக்குனர்கள், தோல்வி இயக்குனர்களுக்கான படம் - நன்றி விழாவில் சசிகுமார் உருக்கம்
டூரிஸ்ட் பேமிலி படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சமுத்திரக்கனி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலிலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வந்தார். இவருடைய மட்டும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு சசி குமார் நடிப்பில் வெளியாகி இருந்த ‘நந்தன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை இரா. சரவணன் இயக்கி இருந்தார். இந்த படத்தை பார்த்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் பாராட்டி இருந்தார்கள்.
டூரிஸ்ட் பேமிலி படம்:
இதைத்தொடர்ந்து தற்போது சசிகுமார் அவர்கள் டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், மீதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். இலங்கை தமிழர் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், டூரிஸ்ட் பேமிலி படம் சூர்யா நடித்த ரெட்ரோ படத்திற்கு போட்டியாக வெளியாகி இருந்தது. சசிகுமாரின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை டூரிஸ்ட் பேமிலி பெற்று இருக்கிறது.
படம் குறித்த தகவல்:
இந்த படம் சசிகுமாருக்கு ஒரு நல்ல பெயரையும் வாங்கி தந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
அதுமட்டுமில்லாமல் இந்த படம் இதுவரை 36 கோடி வசூல் செய்திருக்கிறது. எதிர்பார்த்ததை விட இந்த படம் வசூல் செய்திருப்பதால் படக்குழுவினர் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா நடைபெற்றிருக்கிறது. இதில் சசிகுமார், சிம்ரன் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய சசிகுமார், எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இந்த படம் வெற்றி அடைந்ததால் என்னுடைய சம்பளத்தை ஏற்றி விடுவீர்களா? என்று பலர் கேட்கிறார்கள்.
நன்றி விழாவில் சசிகுமார்:
சம்பளம் மாறாது, அதே சம்பளம் தான். ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு இப்படி ஒரு வெற்றி கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம். இதை என்னுடைய வெற்றியாக நான் பார்க்கவில்லை. சசிகுமார் ஜெயித்துவிட்டார், தயாரிப்பு நிறுவனம் ஜெயித்து விட்டது என்றெல்லாம் நினைக்காதீர்கள். புது இயக்குனர்களுக்கும், தோல்வியடைந்த இயக்குனர்களுக்குமே இந்த படம் ஒரு நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. தோல்வியடைந்தால் ஆமாம், நான் தோல்வி அடைந்து விட்டேன் என்று அந்த தோல்வியை ஒத்துக் கொள்ள வேண்டும். என்னுடைய தோல்வியை ஒவ்வொரு முறையையும் நான் ஏற்றுக்கொண்டேன். மேலும், இந்த படம் வெளியான முதல் நாள் கிட்டத்தட்ட 2 1/2 கோடி தான் வசூலித்தது.
https://www.youtube.com/watch?v=X8clMO2OzT4
படம் பற்றி சொன்னது:
என்னுடைய ஒரு படம் மொத்தமாகவே இரண்டு கோடி தான் வசூல் செய்தது. இன்னொரு படம் பல கோடிக்கு ஓடி இருக்கிறது. நான் நடித்த படங்களில் சுந்தர பாண்டியன், குட்டிப்பலியும் தான் அதிக வசூல் செய்த படம். ஆனால், இன்று இந்த டூரிஸ்ட் ஃபேமிலி அந்த சாதனையும் முறியடித்து இருக்கிறது. அதனால் இனி வருபவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுங்கள். சுந்தரபாண்டியன் படம் எல்லோருக்குமே எப்படி பிடித்ததோ அதேபோல் இந்த படத்திலும் வரும் தர்ம தாஸ் கதாபத்திரமும் எல்லோருக்கும் பிடிக்கும். அதே மாதிரி தான் நான் தியேட்டருக்கு சென்று பார்த்த போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நல்ல படம் கொடுத்தால் குடும்பத்துடன் தியேட்டருக்கு மக்கள் வருவார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன் என்று உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார்.