பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் போட்ட திடீர் பதிவு - என்ன சொல்லி இருக்காரு பாருங்க
பாக்கியலட்சுமி சீரியலின் முடிவு குறித்து கோபி சதீஷ் வெளியிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.
இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவாகரத்திற்கு பின் பாக்கியா கேன்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றிக் கொண்டிருக்கிறார்.
பாக்கியலட்சுமி:
ஆரம்பத்தில் கோபி- ராதிகா இடையே திருமண வாழ்க்கை நன்றாக சென்றாலும் ஈஸ்வரியால் நிறைய பிரச்சனைகள் வந்தது. இதனால் இருவருக்கும் இடையே நிறைய மனஸ்தாபுகள், சண்டைகள் சென்றது. ஒரு கட்டத்தில் கோபி திருந்தி வாழும் நினைக்கும்போது ராதிகா விவாகரத்து கொடுத்தார். கோபியும் ராதிகாவின் விருப்பத்திற்கு விவாகரத்து கொடுத்துவிட்டார். ராதிகா தன்னுடைய மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். கோபி எங்கு போவது என்று தெரியாமல் பாக்கியா வீட்டிலேயே தங்கிவிட்டார். ஈஸ்வரி சொன்ன வார்த்தைக்காக பாக்யாவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
சீரியல் கதை:
தற்போது பாக்கியா புது ரெஸ்டாரண்டை திறந்து இருக்கிறார். அதேபோல் செழியன் பிசினஸில் பிஸியாக இருக்கிறார். எழில் தன்னுடைய முதல் படத்தை எடுத்து வெற்றிகரமாக வெளியிட்டார். படமும் சூப்பர் ஹிட். தற்போது தன்னுடைய இரண்டாவது படத்திற்கான வேலையில் இருக்கிறார். எல்லோரும் அவரவர்கள் வேலையில் பிஸியாக இருக்கிறார்கள். கோபி மட்டும் தனியாக இருப்பதை நினைத்து கவலைப்பட்ட ஈஸ்வரி, மீண்டும் கோபி- பாக்கியாவை திருமணம் செய்து வைப்பதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
இனி அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.
கோபி சதீஸ் பதிவு:
கடந்த சில கடந்த சில மாதங்களாகவே பாக்கியலட்சுமி சீரியல் முடிய இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், இது தொடர்பாக சீரியல் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமே வெளியாகவில்லை. இந்த நிலையில் சீரியலில் கோபியாக நடித்துக் கொண்டிருக்கும் சதீஷ் அவர்கள் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், பாக்கியலட்சுமி என்ற பப்ளிக் எக்ஸாம் முடியும் நேரம் வந்துவிட்டது. நான் பாஷா, இல்லை பெயிலா என்பது ரசிகர்கள் ஆகிய உங்கள் கையில் இருக்கிறது.
சதீஸ் குறித்த தகவல்:
மனதிலும் உடம்பிலும் சோர்ந்து விட்டேன். இருந்தாலும் முயற்சிகள் தொடருவேன் என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வர இருப்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் சதீஷ்குமார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால், இதற்கு முன் சதீஸ் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். இவர் ஏராளமான படங்களில் நடித்தார். இவரை பெரிய அளவு பிரபலம் ஆகியது பாக்கியலட்சுமி தான்.