ரஜினியுடன் என்ன பிரச்சனை? சிவாஜி, எந்திரன் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? மனம் திறந்த சத்யராஜ்

By subhashini · 5/6/2024

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் இந்தியா அளவில் வெற்றியை கண்டது மட்டும் இல்லாமல் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது.

மேலும், ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியின் 170வது படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ஃபஹத் சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தினுடைய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

லோகேஷ்-ரஜினி கூட்டணி:

இந்த படத்தில் ரஜினி அவர்கள் காவல் அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து ரஜினி அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. சில வாரங்களுக்கு முன்புதான் இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வந்தது. அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது.

கூலி படம் குறித்த தகவல்:

அந்த போஸ்டரில் ரஜினி தன்னுடைய கைகளில் தங்க கடிகாரம் கை விலங்கு அணிந்திருந்தார். அதோடு இந்த படத்தில் இவர் தாதா வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜூன் 10 ஆம் தேதியில் இருந்து இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மேலும், இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.

ரஜினி-சத்யராஜ் சர்ச்சை:

இதற்கு முன்பே சத்யராஜ்- ரஜினிகாந்த் இருவரும் இணைந்து மிஸ்டர் பாரத் என்ற படத்தில் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதற்குப் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. பின் சிவாஜி, எந்திரன் போன்ற படங்களில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு சத்யராஜுக்கு வந்தது. ஆனால், சத்யராஜ் நடிக்க மறுத்துவிட்டார். இதற்கு பலருமே ரஜினிகாந்த்- சத்யராஜ் இடையே சண்டை. அதனால் தான் ரஜினி உடன் சத்யராஜ் சேர்ந்து நடிக்கவில்லை என்றெல்லாம் வதந்திகளை கிளப்பி இருந்தார்கள்.

சத்யராஜ் பேட்டி:

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சத்யராஜ் ரஜினியுடன் இணைந்து கூலி படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் சத்யராஜ், யார் தான் இதுபோல புரளியை கிளப்புகிறார்கள் என்று தெரியவில்லை. ரஜினியுடன் சேர்ந்து நடிக்க எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. மிஸ்டர் பாரத் படத்தில் அவருடன் நடிக்கும்போது என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தது. அதற்கு பிறகு ரஜினியுடன் சேர்ந்து நடிக்கிறேன் என்றால் அதையும் தாண்டி நல்ல கதாபாத்திரம் கிடைக்க வேண்டும். சிவாஜி, எந்திரன் படங்களில் அப்படியான கதாபாத்திரம் கிடைக்கவில்லை. அதனால் தான் அந்த படத்தில் நடிக்கவில்லை. மற்றபடி எனக்கும் ரஜினிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full