சாமிய திட்டுனதால தான் மனைவிக்கு இப்படி ஆயிடுச்சு? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சத்யராஜ்

By subhashini · 22/11/2024

தன்னுடைய மனைவியின் உடல்நிலை குறித்த விமர்சனங்களுக்கு நடிகர் சத்யராஜ் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘கட்டப்பா’ என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டவர் சத்யராஜ். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘ தோழர் சேகுவரா’ .

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது சத்யராஜ் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், திவ்யா அப்படி இல்லை. தனது அப்பாவை போலவே இவரும் ஒரு நாத்திகவாதி. இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிஷனிஸ்ட்களில் ஒருவராக சத்யராஜ் மகள் திவ்யா இருக்கிறார்.

சத்யராஜ் குடும்பம்:

இவர் நியூட்ரிஷியன் துறையில் எம். ஃபில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் நியூட்ரிஷன் துறையில் பல கான்ஃபரன்ஸ்களும் நடத்தியுள்ளார் திவ்யா. சமீபத்தில் திவ்யா, தன் தந்தை மற்றும் தாய் குறித்து பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், என் அம்மா 4 வருஷமாக கோமாவில் இருக்கிறார். அவங்களுக்கு PEG மூலம் தான் உணவளிக்கிறோம். இதனால் முற்றிலும் நாங்கள் உடைந்து போனோம். ஆனால், நம்பிக்கையோடு மருத்துவ முன்னேற்றத்திற்காக காத்திருப்போம். நாங்கள் அம்மாவை மீட்டெடுப்போம் என்பது எங்களுக்கு தெரியும்.

சத்யராஜ் மனைவி நிலைமை:

அப்பா நாலு வருஷமாக சிங்கிள் பேரண்டாக இருக்கிறார் என்று கூறி இருந்தார். இவரின் பதிவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியாகி, சத்யராஜ் சார் இப்படி ஒரு கஷ்டத்தில் இருப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை. விரைவில் உங்க அம்மா குணமடைவார்கள் என்று திவ்யா சத்யராஜுக்கு ஆறுதலாக பதிவிட்டு இருந்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சத்யராஜிடம் தொகுப்பாளர், உங்களுடைய மனைவி குறித்தும், நீங்கள் சாமியே கும்பிடுவதில்லை. அதனால் தான் இப்படி எல்லாம் ஆனது என்றெல்லாம் சொல்கிறார்கள் என்றார்.

சத்யராஜ் பேட்டி:

அதற்கு சத்யராஜ், சாமி கும்பிடுபவர்கள் வீட்டில் கஷ்டம் இல்லையா? காய்ச்சல் வந்ததில்லையா? உடல்நிலை சரியில்லாமல் போனதில்லையா? அவர்கள் வீட்டில் யாருமே அவஸ்தைப்படுவது இல்லையா? கஷ்டத்தில் இருப்பதில்லையா? அவர்கள் வீட்டில் யாருமே தற்கொலை செய்து கொள்வது கிடையாதா? குடும்பத்தோடு கோவிலுக்கு போகும் போதே வாகனங்கள் எல்லாம் கவிழ்ந்து விபத்து நடந்தது இல்லையா? இப்படி சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். அதை பற்றி கண்டு கொள்ள தேவையில்லை. என்னுடைய வாழ்க்கையில் பர்சனல் பிரச்சனைகள் இருக்கு.

https://www.youtube.com/watch?v=XlblGJrecAQ

விமர்சனங்களுக்கு கொடுத்த பதிலடி:

அதை நான் என்னுடைய வாழ்க்கையில் நடிப்பு துறையில் கொண்டு சென்றது கிடையாது. இப்போது கூட என்னுடைய மனைவி கோமாவில் தான் இருக்கிறார். இது என்னுடைய நெருக்கமானவர்களுக்கு ஏற்கனவே தெரியும். சிவகுமார், பிரபு போன்றவர்களுடைய குடும்பத்தினருக்கும் இந்த விஷயம் நன்றாகவே தெரியும். கிட்டத்தட்ட நான்கரை வருடங்களாக அவர் கோமாவில் தான் இருக்கிறார். ஆனால், சந்தோசம்- துக்கம் என எல்லாமே சேர்ந்தது தானே வாழ்க்கை. நான் என்னுடைய குடும்பத்துடன் நிறைய நேரம் செலவழிகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full