70வது வயது நிறைவு, பீமரத சாந்தி திருமணம் செய்த செந்தில் - ஆசி பெற்று மகிழ்ந்த மகன் மற்றும் பேரன் பேத்திகள்.

By Arun · 29/3/2023

தமிழ் சினிமா உலகில் எவர் கிரீன் நகைச்சுவை நடிகராக விளங்கியவர் செந்தில். சினிமா உலகில் நகைச்சுவை பார்ட்னர்ஸ் என்று கேட்டாலே சின்ன குழந்தை கூட கவுண்டமணி– செந்தில் என்று தான் சொல்லும். தமிழ் சினிமா உலகில் காமெடி என்றால் முதலில் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி– செந்தில் காம்போ தான். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி படங்கள் எல்லாம் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. காலங்கள் மாற மாற இவர்களுடைய பயணமும் மாறிவிட்டது. இருந்தாலும் இப்போது வரை தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி –செந்தில் காம்போவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவர்களுடைய காமெடிக்கு அடிச்சுக்க இன்னும் யாரும் வரவில்லை என்று தான் சொல்லணும். அப்போதெல்லாம் இவர்களுடைய நகைச்சுவைக்காகவே படம் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் குவியும்.

செந்தில் கடந்து வந்த பாதை :

மேலும், நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்கள் முதன் முதலாக மதுபான கடையில் தான் பணிபுரிந்தார். பின் நாடகங்களில் சேர்ந்து நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டார். அதற்கு பிறகு வெளியான மலையூர் மம்முட்டியான் என்ற படம் தான் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார்.பின் 1984 ஆம் ஆண்டு நடிகர் செந்தில் அவர்கள் கலைச் செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

https://www.youtube.com/watch?v=LYRPVS6T8SE&t=3s

செந்தில் மகன்கள் :

இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பிரபு என்ற இரு மகன்கள் உள்ளார்கள். இவருடைய மூத்த மகன் மணிகண்ட பிரபு ஒரு பல் மருத்துவர். இவர் சொந்தமாக சாலிகிராமத்தில் தான் மருத்துவமனையை வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு ‘உன்னை எனக்கு பிடிச்சிருக்கு’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார் என்று குறிப்பிடத்தக்கது.

இந்த படம் பூஜை எல்லாம் போட்டு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை அந்த படம் அப்படியே நின்றுவிட்டது.இன்னொரு மகன் சினிமாட்டோகிராபி படித்து உள்ளார். மணிகண்ட பிரபுவிற்கு மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் அரவிந்த் குமார்- உமையாள் தம்பதியின் மகளான டாக்டர் ஜனனி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்கள் திருமணம் மதுரை பிடிஆர் திருமண மகாலில் நடந்தது.

பீமரத சாந்தி பூஜை :

திருமணத்தில் நடிகர் கவுண்டமணி அவர்கள் கலந்துகொண்டார். அதோடு கவுண்டமணி அவர்கள் அவர்களுக்கு தாலி எடுத்து திருமணத்தை தலைமை தாங்கியும் நடத்தினார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் செந்தில் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினர். இப்படி ஒரு நிலையில் திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்பிகா சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் செந்தில் தம்பதி பீமரத சாந்தி பூஜை நடத்தினர். இதில் செந்திலின் மகன்கள் மற்றும் பேர பிள்ளைகள் அனைவரும் கலந்துகொண்டனர். 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.


Tamil Behind Talkies AMP · Quick view
View full