வெள்ளை தாடி, திறந்துவிட்ட சட்டை. அட, காமெடி ஜாம்பவான் செந்திலா இது. வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 30/5/2020

தமிழ் சினிமா உலகில் எவர் கிரீன் நகைச்சுவை நடிகராக விளங்கியவர் செந்தில். சினிமா உலகில் நகைச்சுவை பார்ட்னர்ஸ் என்று கேட்டாலே சின்ன குழந்தை கூட கவுண்டமணி– செந்தில் என்று தான் சொல்லும். இவர்களுடைய காமெடிக்கு அடிச்சுக்க இன்னும் யாரும் வரவில்லை. அப்போதெல்லாம் இவர்களுடைய நகைச்சுவைக்காகவே படம் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் குவியும். நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்கள் முதன் முதலாக மதுபான கடையில் தான் பணிபுரிந்தார். பின் நாடகங்களில் சேர்ந்து நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டார்.

அதற்கு பிறகு 1983 ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்முட்டியான் என்ற படத்தின் மூலம் தான் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகர் செந்தில் அவர்கள் நடித்த படத்தின் காமெடியை ட்ரெண்டிங் செய்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்கள். 1989 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் கரகாட்டக்காரன்.

இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. இந்த படத்திலேயே கவுண்டமணி --செந்தில் அவர்களின் காமெடி காட்சிகள் ஒவ்வொன்றும் வேற லெவல். அதுவும் இவர்களுடைய வாழைப்பழ காமெடி இன்று கூட மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு இருக்கிறது.

https://twitter.com/beercomerad/status/1266410922840518656

இந்நிலையில் நடிகர் செந்தில் நடித்த வாழைப்பழ காமெடியை பெண்ணொருவர் டிக் டாக் செய்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் செந்தில் உள்ளார். அவரை பார்ப்பதற்கே அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார். தாடி மீசையெல்லாம் நிறைத்து போய் உள்ளது. இதை பார்த்த எல்லோரும் இது கரகாட்ட செந்திலா?? என்று கேட்டுள்ளார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full