நடிப்பு கைகொடுக்கல படிப்பு கைகொடுத்தது - ஏழைகளுக்கு சேவை செய்து வரும் செந்தில் மகன்

By subhashini · 1/10/2023

நடிகர் செந்திலின் மகன் குறித்து பலரும் அறியாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் எவர் கிரீன் நகைச்சுவை நடிகராக விளங்கியவர் செந்தில். சினிமா உலகில் நகைச்சுவை பார்ட்னர்ஸ் என்று கேட்டாலே சின்ன குழந்தை கூட கவுண்டமணி– செந்தில் என்று தான் சொல்லும். அதேபோல் காமெடி என்றாலும் முதலில் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி– செந்தில் காம்போ தான்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி படங்கள் எல்லாம் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மேலும், இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. காலங்கள் மாற மாற இவர்களுடைய பயணமும் மாறிவிட்டது. இருந்தாலும், இப்போது வரை தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி –செந்தில் காம்போவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவர்களுடைய காமெடிக்கு அடிச்சுக்க இன்னும் யாரும் வரவில்லை என்று தான் சொல்லணும்.

செந்தில் திரைப்பயணம்:

அப்போதெல்லாம் இவர்களுடைய நகைச்சுவைக்காகவே படம் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் குவியும்.
மேலும், நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்கள் முதன் முதலாக மதுபான கடையில் தான் பணிபுரிந்தார். பின் நாடகங்களில் சேர்ந்து நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டார். அதற்கு பிறகு வெளியான மலையூர் மம்முட்டியான் என்ற படம் தான் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் நடித்து இருந்தார்.

செந்தில் குடும்பம்:

பின் 1984 ஆம் ஆண்டு நடிகர் செந்தில் அவர்கள் கலைச் செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பிரபு என்ற இரு மகன்கள் உள்ளார்கள். இவருடைய மூத்த மகன் மணிகண்ட பிரபு ஒரு பல் மருத்துவர். இவர் சொந்தமாக சாலிகிராமத்தில் தான் மருத்துவமனையை வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு ‘உன்னை எனக்கு பிடிச்சிருக்கு’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார் என்று குறிப்பிடத்தக்கது.

மணிகண்ட பிரபு குறித்த தகவல்:

பின் இவர் ஜனனி என்பவரை திருமணம்செய்து கொண்டார். இவரும் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. செந்திலின் இன்னொரு மகன் சினிமாட்டோகிராபி படித்து உள்ளார். மேலும், செந்தில் மகன் மணிகண்ட பிரபு மீண்டும் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். பாபி சிம்ஹா தயாரித்து, நடிக்கும் படத்தில் தான் தற்போது மீண்டும் நடிகராக மணிகண்ட பிரபு களமிறக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் செந்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

செந்தில் மகன் அளித்த பேட்டி:

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் எடுத்த புகைபடங்கள் வெளியாகி இருக்கிறது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் கிராமத்து கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் செந்தில் அவர்கள் சந்தானத்தின் நடிப்பில் வெளிவந்த கிக் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார். இது பல பேருக்கு தெரியாது. சமீபத்தில் அவர் பேட்டியில், தன்னுடைய தந்தை குறித்தும் தொழில் குறித்தும் பல விஷயங்கள் பேசினார். அப்போது தங்களுடைய குடும்பத்தில் யாருமே இதுவரை படித்ததில்லை என்றும் தான் முதல் பட்டதாரி என்றும் பெருமிதமாக பேசி இருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full