'மகாராஜா' படத்தை எனது அப்பாவால் மிஸ் செய்தேனா - விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் சாந்தனு போட்ட டீவீட்
'மகாராஜா' கதையில் முதலில் நடிகர் சாந்தனு நடிக்க இருந்தார் என இயக்குனர் நித்திலன் சாமிநாதன் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய படம் தான் 'மகாராஜா'. இந்த திரைப்படத்தை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருக்கிறார்.
மேலும், இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், முனிஷ்காந்த், சிங்கம் புலி, அனுராக் காஷ்யப், அபிராமி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருவது மட்டுமல்லாமல் நல்ல வசூல் சாதனையும் செய்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி மகாராஜா படம் Netflixல் வெளியாகி இருந்தது. ஓடிடி யில் மீண்டும் மகாராஜா படத்தை மக்கள் கொண்டாடி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நித்திலன் சாமிநாதன் பேட்டி:
சமீபத்தில் பேட்டியில் நித்திலன், மகாராஜா கதையை நான் நிறைய நடிகர்களிடமும், ப்ரொடியூசர்களிடமும் கூறி இருக்கிறேன். அவங்க எல்லாரும் கதையை கேட்டு இன்ட்ரஸ்டா தான் இருந்தாங்க. குறிப்பாக பாக்கியராஜ் மகன் நடிகர் சாந்தனு ரொம்ப இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று இன்ட்ரஸ்ட் ஆக இருந்தார். அவர் நிறைய தயாரிப்பாளர்களிடம் என்னை ரெகமெண்ட் பண்ணார். ஆனா, அப்போ வொர்க் அவுட் ஆகல.
First of all, I’m truly glad that Nithilan could bring #Maharaja to life, earning the recognition he deserves worldwide. It reassures me that I picked the right script back then
— Shanthnu (@imKBRshanthnu) August 20, 2024
Secondly, it’s incredibly kind of him to give me credit even after 10 years, really happy for you… https://t.co/DypxVCSpYc
சாந்தனு ட்வீட்:
அப்புறம் ரொம்ப நாள் தள்ளி தள்ளி போனதுனால, வேற ஒரு ஸ்கிரிப்ட் எடுத்து பண்ணேன். அதுதான் 'குரங்கு பொம்மை'. நான் முதல் நினைச்ச படம் எடுக்க முடியல. அந்த படத்தோட கருவை எடுத்து பண்ண படம் தான் 'மகாராஜா' என்று கூறியுள்ளார். தற்போது சாந்தனு குறித்து பேட்டியில் இயக்குனர் நித்திலன் கூறிய நிலையில், நடிகர் சாந்தனு தனது எக்ஸ் தளத்தில், மகாராஜா படத்திற்கு உயிர் கொடுத்த இயக்குனர் நித்திலனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அப்போது நான் சரியான கதையை தான் தேர்வு செய்திருக்கிறேன் என்று நினைத்து பெருமைப்படுகிறேன்.
தயாரிப்பாளர்கள் ரெடியாக இல்லை:
ஆனால், இந்த படத்தை நான் மிஸ் செய்ய எனது அப்பா பாக்கியராஜோ அல்லது நானோ காரணம் இல்லை. அந்த சமயத்தில், இந்தப் படத்தை எடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன் வரவில்லை. இந்த கதையை எனக்கு சொன்னதே என்னுடைய அப்பாவுக்கு தெரியாது. ஆனால், இப்போ 'கன்டென்ட் தான் கிங்' என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும் என்று சாந்தனு பதிவிட்டுள்ளார். தற்போது நடிகர் சாந்தனுவின் ட்வீட் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
சாந்தனு குறித்து:
பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் பல வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். இந்த வகையில் நடிகர் சாந்தனுவை அவரது தந்தை பாக்கியராஜ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தி இருந்தார். தற்போது வளர்ந்து வரும் நடிகராக சாந்தனு இருக்கிறார். என்னதான் அழகும் திறமையும் இருந்தாலும் இவரால் ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க முடியவில்லை. இவர் நடித்த பல படங்கள் தோல்வியை தான் சந்தித்து இருக்கிறது. கடைசியாக இவர் 'ப்ளூ ஸ்டார்' என்ற படத்தில் நடிகர் அசோக் செல்வனுடன் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களே பெற்றது.