எல்லாத்துக்கும் காரணம் மன அழுத்தம் தான் - சாந்தனுவை சோகத்தில் ஆழ்த்திய நெருங்கியவரின் மரணம்.

By Rajkumar · 9/6/2020

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சாந்தனு. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகரான பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா ஆகியோரின் மகன் தான் சாந்தனு. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக கலக்கி கொண்டு இருக்கிறார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’.

https://twitter.com/imKBRshanthnu/status/1269865095451963397

இந்த படத்தில் நடிகர் சாந்தனு அவர்கள் கல்லூரி மாணவனாக நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகர் சாந்தனு அவர்கள் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். மேலும், இவர் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருப்பார். இவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஏதாவது பதிவிட்டு கொண்டு இருப்பார். அதில் சில சர்ச்சைகளும் எழுந்து உள்ளது.

இந்நிலையில் நடிகர் சாந்தனு அவர்கள் தன்னுடைய டீவ்ட்டர் பக்கத்தில் மன வேதனை உடன் டீவ்ட் போட்டு உள்ளார். அதில் அவர் தன்னுடைய முக்கிய நண்பர் ஒருவரை இழந்துள்ளார் என்று குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் கூறி இருப்பது, நான் மிக நெருங்கிய நண்பரை இழந்து விட்டேன். இளமை, ஆரோக்கியத்துடன் இருந்தவருக்கு எப்படி இப்படி நடந்தது என்று புரியவில்லை.

அவர் இறந்ததற்க்கு காரணம் மன அழுத்தம் தான். பல விசயங்களால் உண்டாகும் மன அழுத்தம் நம் உயிரை பறித்துவிடுகிறது. மன அழுத்தம், எதிர்மறை, வெறுப்பால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. அடுத்த நிமிடம் நடக்கப்போவது என்ன என்பதை கணிக்க முடியாது என மனவேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full