இலவச திருமணம், இலவச உணவு, இலவச சாலை - சேஷு செய்துள்ள உதவிகளை நினைத்து கலங்கும் ஏறியா மக்கள்.

By Rajkumar · 20/3/2024

சேஷு செய்த உதவிகள் குறித்து அவரின் பகுதி மக்கள் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக திகழ் பவர் லொள்ளு சபா சேசு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் சந்தானம், ரோபோ சங்கர் போன்ற பல பிரபலங்கள் தமிழ் சினிமா உலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சேசு. இவர் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தான் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். அதற்கு பின் இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் மாறன், சந்தானம், ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்ட லொள்ளு சபா நிகழ்ச்சியின் முதல் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது.

நடிகர் சேசு திரைப்பயணம்:

அதன் பின் இவர் வீராப்பு, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், திரௌபதி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வடிவேலு நடிப்பில் வெளியாகி இருந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் இவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பூமர் அங்கிள், ராயர் பரம்பரை போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இவர் வெள்ளி திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

https://twitter.com/ThanthiTV/status/1770085172366712834

மருத்துவமனையில் அனுமதி :

இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் இவரது காமெடி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ரசிகப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இவர் திடீர் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சமீபத்தில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

சேஷுவின் ஈகை குணம் :

அங்கே இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேஷு ஒரு காமெடி நடிகர் என்பதை தாண்டி ஒரு சிறந்த மனிதர். நடிகர் மயில்சாமி போல மக்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்துள்ளார். இதுவரை ஆறு ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் சேது. மேலும், இந்த ஆண்டிற்குள் மேலும் பல திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

மக்கள் பிரார்த்தனை

இப்படி ஒரு நிலையில் சேஷுவின் பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அவர் செய்த உதவிகளை கூறி அவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். சேஷுவின் உடல் நிலை குறித்து கூறிய அவரின் மகன் 'என் தந்தை உடல் நிலை தேறி வருகிறது. மருந்துகளும் நன்றாக வேலை செய்கிறது. மருத்துவர்களும் அவர் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கிறார், விரைவில் நலமுடன் திரும்புவார் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full