புற்று நோய், சொத்துக்களை தானம், பரவிய வதந்தி - ஜெயிலர் நடிகர் சிவராஜ்குமார் விளக்கம்
தன்னைப் பற்றி பரவும் வதந்திகள் குறித்து கன்னட நடிகர் சிவராஜ்குமார் கொடுத்திருக்கும் விளக்கம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மறைந்த பழம்பெறும் கன்னட நடிகரும், அரசியல்வாதியுமான டாக்டர் ராஜ்குமாரின் மகன் தான் சிவராஜ்குமார். 62 வயதாகும் இவர், சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அதேபோல் சென்னையில் உள்ள எம்ஜிஆர் கவர்மெண்ட் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ட்ரைனிங் இன்ஸ்டிடியூட்டில் சினிமா சம்பந்தமான படிப்பை முடித்துவிட்டு, தெலுங்கு திரையுலகில் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கியவர்.
முதலில், 1974 ஆம் ஆண்டு 'ஸ்ரீ சீனிவாசா கல்யாணம்' என்கிற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பின் 1986 ஆம் ஆண்டு 'ஆனந்த்' என்கிற கன்னட திரைப்படத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நாயகனுக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதை வென்ற இவர், தொடர்ந்து அதிரடி ஆக்சன் நாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
சிவராஜ்குமார் குறித்து :
மேலும், கடந்த சில வருடங்களாக இவர் கன்னட திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களில் மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக 'ஜெயிலர்' திரைப்படத்தில் ரஜினிகாந்தின் நண்பராக நரசிம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானார். அதேபோல் தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' படத்துல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு 'தளபதி 69' திரைப்படத்திலும் சிவராஜ்குமார் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
சிவராஜ் குமார்பற்றிய வதந்திகள் :
சிவராஜ்குமார், நடிகர் என்பதை தாண்டி பாடகர் ஆகவும் பிரபலமானவர். இவர் இதுவரை 20 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். தற்போது இவருடைய கைவசம் ஆறு படங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி திரையுலகில் பிஸியாக நடித்து வரும் இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், அதற்காக அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற உள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
சிவராஜ் குமார் அறிக்கை :
இந்நிலையில் அவர் இது குறித்து விளக்கம் அளித்துளார். அதில், 'நான் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். அதற்காக சிகிச்சைக்காக நான் அமெரிக்கா செல்கிறேன். ஆனால், எனக்கு வந்திருப்பது புற்றுநோய் இல்லை. இன்னும் எனக்கு என்ன நோய் என்பதை நாங்களே கண்டறியவில்லை. எனவே ரசிகர்கள் பதட்டம் அடைய வேண்டாம். நான் நலமுடன் வீடு திரும்பினேன் ' என்று தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் அதிர்ச்சி :
மேலும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் சிவராஜ்குமாரின் தம்பியும், பிரபல நடிகருமான புனீத் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அந்த வெற்றிடமே இன்னும் நிறையாத நிலையில் தற்போது சிவராஜ் குமாருக்கு இப்படி ஒரு பிரச்சனையா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதற்கிடையே இவர் தன்னுடைய சொத்துக்களை கூட ஆசிரமத்திற்கு எழுதி வைத்து விட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன.