குழந்தை பருவத்தில் இருக்கும் இந்த பிரபல முன்னணி நடிகர் யார் என்று யூகிக்கமுடிகிறதா ?
புகைப்படத்தின் இருக்கும் குழந்தை வேறு யாரும் இல்லை பிரபல நடிகர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபிராஜ் தான்.தமிழில் கடந்த 2003 வெளியான "ஸ்டுடென்ட் நம்பர் 1 " என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் சிபிராஜ்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த "ரங்கா" படமும் பாக்ஸ் ஆபிசில் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியடையவில்லை. தற்போது கிஷோர் இயக்கத்தில் "மாயோன்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ்.இந்த படத்தில் ஒரு தொல்பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார். இந்த படத்தின் டீஸர் 2 மாதத்திற்கு முன்னர் வெளியான நிலையில் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர் தமிழில் "ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல்" போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது பெரும்பாலான படங்கள் தோல்வியிலேயே முடிவடைந்தது.நடிகர் சிபிராஜ் ஐடி ஊழியரான ரேவதி என்ற பெண்ணை 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார் பின்னர் அவரையே கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் சிபிராஜிற்கும் தீரன் மற்றும் சமாரன் என்ற இரு ஆண் குழந்தைகளும் பிறந்தனர். தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வளம் வர முடியாமல் பல ஆண்டுகளாக தவித்து வந்தார் சிபிராஜ். இதுவரை இவர் நடித்த படங்களிலேயே "லீ", "நாய்கள் ஜாக்கிரதை" போன்ற ஒரு சில படங்கள் மட்டுமே ஓரளவிற்கு வெற்றி படமாக அமைந்திருந்தது.அந்தக் குழந்தையே....?? pic.twitter.com/4Y3zF9ASbI
— Sibi (Sathya)raj (@Sibi_Sathyaraj) October 10, 2018