'கெட்டி மேளம்' சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகர் - காரணம் என்ன? அதிருப்தியில் ரசிகர்கள்

By subhashini · 22/10/2025

கெட்டிமேளம் சீரியலை விட்டு முக்கிய நடிகர் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் சிபு சூர்யன். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் கன்னடாவிலும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் இவர் நாடகங்களில் முறையாக சேர்ந்து கற்று கொண்டார்.

பின் இவர் 2017 ஆம் ஆண்டு கன்னட மொழியில் தான் நடிக்க ஆரம்பித்தார். அதற்கு பிறகு தமிழில் சன் டிவியில் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ரோஜா சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வெற்றி அடைந்தது. இந்த சீரியலின் மூலம் தான் சிபு சூரியன் தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார்.

சிபு சூர்யன் குறித்த தகவல்:

அதனை தொடர்ந்து இவர் சந்திரலேகா, லட்சுமி ஸ்டோர்ஸ், பூவே உனக்காக, அன்பே வா, கண்ணான கண்ணே போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இதை அடுத்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கெட்டிமேளம் என்ற தொடரில் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த சீரியலில் நடிகர் பொன்வண்ணன், பிரவீனா, சாயா சிங் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

கெட்டிமேளம் சீரியல்:

இந்த சீரியல் ஒளிபரப்பான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சீரியலில் வெற்றி ஹீரோயின் சாயா சிங்கை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அதற்குப் பின் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் கதையை காண்பித்து இருக்கிறார்கள். அதோடு சாயா சிங்கின் தங்கை அஞ்சலியின் வாழ்க்கையில் நடக்கும் கதையும் விறுப்பாக செல்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த தொடரில் இருந்து ஹீரோ வெற்றி கதாபாத்திரத்தில் நடித்த சிபு சூர்யன் விலகி இருக்கும் தகவல் தான் வெளியாகி இருக்கிறது.

சீரியல் விலகல்:

சீரியல் விறுவிறுப்பாக செல்லும் நேரத்தில் சிபு வெளியேறியது பலருக்குமே பேரதிர்ச்சி தான். சில தினங்களுக்கு முன்பு தான் சீரியல் யூனிட் தரப்பில் இருந்து இந்த தகவல் வெளியானது. ஆனால், இவர் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இன்னும் சில தினங்களில் இவருக்கு பதில் வேறொருவர் வெற்றியின் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full