வைரஸ் காய்ச்சல்..!திடீர் அறுவை சிகிச்சை..!சிரமத்திற்கு உள்ளான சித்தாரத்..!

By Rajkumar · 26/12/2018

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும்பவர் நடிகர் சித்தார்த். இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இளம் நடிகராக அறிமுகமானவர்.

https://twitter.com/Actor_Siddharth/status/1077770731356708869

தமிழ் சினிமாவில் ஒரு சாக்லேட் பாயாக அறிமுகமான இவர் அதன் பின்னர் பல்வேறு வித்யாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும், பல்வேறு சமூக பிரச்சனைகளிலும் குரல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மன திருப்தியாக இவ்வருடம் முடிகிறது, அடுத்த வருடம் முழுவதும் பட ரிலீஸ் இருக்கிறது. கடந்த இரண்டு மாதமாக தோள்பட்டை அறுவை சிகிச்சை, படப்பிடிப்புகள், வைரஸ் தொற்று இதையெல்லாம் பார்த்துவிட்டேன், 2018 போதும், அடுத்த வருடம் பார்ப்போம் என டுவிட் செய்துள்ளார்.

இந்த விடயம் சித்தார்த் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தற்போது நடிகர் சித்தார்த் உடல் நலம் தேறி வந்து படங்களில் வழக்கம் போல நடித்து வருகிறார்.தற்போது தமிழில் சைத்தான் கி பச்சா படத்தில் நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full