அவர் கிட்ட புடிச்சது இதான் - தன்னை பற்றி விஜய் பேசிய வீடியோவை பகிர்ந்த சித்தார்த் (சரியான குசும்புபா இந்த மனுஷன்)

By Rajkumar · 1/5/2021

சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாகவே ட்ரெண்டிங்கிங் நபராக இருந்து வருகிறார் நடிகர் சித்தார்த். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். சமூக வலைதளத்தில் கடந்த சில காலமாகவே மத்திய அரசை கடுமையாக சாடி வருகிறார். அதிலும் சமீபத்தில் உத்தரப்பிரதேசச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு அரை விழும் என்று சித்தார்த் செய்த ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

https://twitter.com/chettyrajubhai/status/1388433793120231436

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுதும் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டுப்பாடு ஏற்பட்டது. அதிலும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசம் நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருக்கிறது. அம்மாநிலத்தில் ஏராளமானோர் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் இடம் கிடைக்காதது உள்ளிட்டவைகளால் உயிரிழந்து வருகின்றனர்.இதனிடையே, உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை என்று தவறான தகவல்களை தரும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் பாருங்க : 7மாத கற்பத்தோடு முக்காலா பாடலுக்கு நடனமாடிய சாண்டி மனைவி - வைரலாகும் வீடியோ இதோ.

இப்படி ஒரு நிலையில் பொய் சொன்னால் அறை விழும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நடிகர் சித்தார்த் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த அவர், சாமானியனாக இருந்தாலும் சரி, சாமியாராக இருந்தாலும் சரி, பொய் சொன்னால் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டு இருந்தார். சித்தார்த்தின் இந்த பதிவால் பா ஜ கவினர் சித்தார்த்தை திட்டி தீர்த்து வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் நடிகர் சித்தார்த், விஜய் தன்னை பற்றிய பேசிய பழைய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசும் விஜய், நடிகர் சித்தார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது இந்தி, தெலுங்கு படங்களை எல்லாம் பார்த்து இருக்கிறேன். அவரது குயூட்னஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று விஜய் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full