இவரை பார்த்து தான் படத்தில் நடித்தேன் - 'டெஸ்ட்' படத்தின் ட்ரைலர் விழாவில் சித்தார்த் சொன்ன விஷயம்
டெஸ்ட் படம் தொடர்பாக நடிகர் சித்தார்த்த அளித்திருக்கும் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சமீப காலமாகவே சித்தார்த் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருந்த சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி இருந்தார். இதை அடுத்து கமல் நடிப்பில் வெளியான ‘இந்தியன் 2’ படத்தில் சித்தார்த் நடித்து இருந்தார். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை மீண்டும் இயக்குனர் சங்கர்- கமல் எடுத்தார்கள்.
சித்தார்த் திரைப்பயணம்:
இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெகன், பாபி சிம்ஹா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. சங்கர் திரைப்பயணதிலேயே இந்த படம் பெரும் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது. கடைசியாக சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருந்த படம் மிஸ் யூ. இந்த படத்தை இயக்குனர் ராஜசேகர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சித்தார்த்துடன் ஆஷிகா ரங்கநாத், பாலசரவணன், கருணாகரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் நடிகர்கள் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
டெஸ்ட் படம்:
தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டெஸ்ட். YNOT ஸ்டுடியோ தான் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே இந்த நிறுவனம் தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம் போன்ற பல படங்களை தயாரித்திருக்கிறது. இந்த படங்களை எல்லாம் தயாரித்த சசிகாந்த் தான் டெஸ்ட் படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார். சக்தி ஸ்ரீ கோபாலன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.
சித்தார்த் பேசியது:
இந்த படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஏப்ரல் நான்காம் தேதி தான் திரைக்கு வர இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருக்கிறது. இந்த விழாவில் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய சித்தார்த், சின்ன வயதில் இருந்தே நான் பார்த்த வியந்த கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். இந்த படத்தில் = நான் டெஸ்ட் கிரிக்கெட்டராக நடித்திருக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=wcFSyPf__LQ
படம் பற்றி சொன்னது:
அவரைப் பார்த்து ரசித்து கற்றுக் கொண்ட விஷயங்களை இந்த படத்தில் நான் பல இடங்களில் காண்பித்திருக்கிறேன். என்னுடைய இந்த கதாபாத்திரத்தை அவருக்கு தான் சமர்ப்பிக்கிறேன். அதேபோல் நான் உதவி இயக்குனராகப் பணியாற்றி இருந்தபோது நான் முதன் முதலில் பார்த்த வியந்த ஹீரோ மாதவன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது அவருடன் நடிக்கும் போது நிறைய கற்றுக் கொண்டேன். இந்த படத்தில் எல்லா கதாபாத்திரமும் ரொம்ப சுவாரசியமாக இருக்கும். புதிய கதைக்களமாக, சிறப்பான திரைப்படமாக இந்த படம் கண்டிப்பாக எல்லோருக்குமே பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.