மேடையை விட்டு தெறித்து ஓடிய சிம்பு..! ஏன் தெரியுமா..

By Ajju · 6/9/2018
தமிழில் குறிஞ்சிபூபோல் அரிதானது மல்டி ஸ்டார் படங்கள். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'செக்கச் சிவந்த வானம்' அத்தகைய அரிதான ஒரு மல்டிஸ்டார் படம்தான். அர்விந்த்சாமி, அருண்விஜய், பிரகாஷ்ராஜ் முதல் சிம்பு, ஜோதிகா, விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், மன்சூர் அலிகான் என பாதி தமிழ் சினிமாவை உள்ளடக்கியிருக்கிறது இப்படம். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு நடுவே ஏ.ஆர்.ரஹ்மான் தனது 'மழைக்குருவி' பாடலோடு விழாவைத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கார்த்திக், சின்மயி ஆகியோர் படத்தின் கதாபாத்திரங்களை ஜோடி ஜோடியாக அழைக்க அரவிந்த்சாமி - அதிதிராவ், அருண் விஜய் - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தங்கள் ' செக்கச் சிவந்த வானம் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துக்கு நடுவே புதுமுக நடிகை டயானா எரப்பாவுடன் மேடை ஏறிய சிம்பு தனது ஆசிரியர் தின வாழ்த்துகளை ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம், வைரமுத்து ஆகியோருக்கு உரித்தாக்கிவிட்டுப் பேச ஆரம்பித்தவர், ``நான் ஒரு வார்த்தைதான் பேச வந்தேன் 'நன்றி மணி சார்'. நான் காண்டிப்பா பேசுவேன், நான் பேசுவேன்னு தெரியும். ஆனா இப்போ பேசுறதவிட. அந்த மனிதர் (இயக்குநர் மணிரத்னம்) எடுத்துள்ள இப்படம் பேசும். அதுக்கப்புறம் நான் பேசுறேன்." என்று கிளம்பினார். மேடைவிட்டு நகர்ந்த சிம்புவை சின்மயி அழைக்க ஆளவிடுங்கடா என்பதுபோல் எஸ்கேப் ஆனது ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாய் இருந்தது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full