ஜீவாவின் 'கோ' படத்தில் நடித்துள்ள சிம்பு, இந்த படத்த எப்படி மிஸ் பண்ணாரு சிம்பு - Unseen புகைப்படங்கள் இதோ.

By Rajkumar · 12/5/2021

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த்கடந்த ஏப்ரல் 30 காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. கே வி ஆனந்த் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என்று 14 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். அதிலும் குறிப்பாக ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட படங்களாக முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களுக்கு கே வி ஆனந்த்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது. தொடர்ந்து ஒளிப்பதிவாளராக இருந்த கே வி ஆனந்த், பின்னர் இயக்குனராக களமிறங்கினார். இவர் முதன்முதலில் இயக்கிய படம் 2005ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் பிரித்திவிராஜ் கோபிகா நடிப்பில் வெளியான கனா கண்டேன் திரைப்படம் மூலம் தான்.

https://twitter.com/sidhuwrites/status/1392470696257744896

அதன் பின்னர் அயன் கோ மாற்றான் அனேகன் காப்பான் போன்ற பல்வேறு படங்களை இயக்கியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சிம்பு, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : 2k மருமகள் மீது அளிக்கப்பட்ட புகார். போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை. இப்போ அந்த பொண்ணு எங்க இருக்கு தெரியுமா ?

அதில், “தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது.அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி.ஆனந்த் அவர்கள். கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும்படி ஆகிவிட்டது. சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் எனச் சொல்லியிருந்தேன்.

https://twitter.com/dsbstr7860/status/1392471458761232388

தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக் கொண்டிருந்தவர், இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது. பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன். இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியதுஎன்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் கோ படத்தில் சிம்பு நடித்த சில காட்சிகளின் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full