உங்கள் கருத்துக்களை சொல்ல நேரம் கொடுத்ததற்கு நன்றி சார் - சிவகார்த்திகேயன் பற்றி நெகிழும் டூரிஸ்ட் பேமிலி இயக்குநர்
டூரிஸ்ட் பேமிலி படத்தை பாராட்டி நடிகர் சிவகார்த்திகேயன் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது சசிகுமார் அவர்கள் டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், மீதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். இலங்கை தமிழர் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டுகிறார்கள். அதோடு இந்த படம் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டுகிறார்கள். அதோடு இந்த படம் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் பதிவு:
மேலும், இந்த படம் இதுவரை 20 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்து படகுழுவினரை நேரில் அழைத்து சிவகார்த்திகேயன் பாராட்டி பின் இது தொடர்பாக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தன்னுடைய instagram பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், எங்களை அழைத்து எங்கள் டூரிஸ்ட் பேமிலி படம் குறித்து உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நேரம் ஒதுக்கியதற்கு ரொம்ப நன்றி சிவகார்த்திகேயன் சார்.
சிவகார்த்திகேயன் பற்றி சொன்னது:
உங்கள் அன்பான வார்த்தைகளும் கருத்துக்களும் உண்மையிலேயே எங்களுக்கு நிறைய மதிப்பளித்திருக்கிறது. உங்களின் கருத்துக்களை கேட்பது நம்ப முடியாத அளவிற்கு நிறைய ஊக்கமளிப்பதாக இருக்கிறது. ஒரு குழுவாக நாங்கள் ரொம்ப நன்றி உள்ளவர்களாகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இதுபோன்ற தருணங்கள் எங்களை இன்னும் அழகாக, இதய பூர்வமான கதைகளை படமாக தூண்டுகிறது என்று கூறியிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=zn4JhPbHE0M
சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடும் உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.
அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்:
அந்த வகையில் கடந்த ஆண்டு சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் அமரன். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.