சம்பள பாக்கியை தரும் வரை விக்ரம், சிம்பு ஆகியோர் படங்களை வெளியிடக்கூடாது என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் தொடர்ந்துள்ள வழக்கு குறித்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர் , தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கிறார்.

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் டாக்டர். நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்தது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி உள்ளது.

Advertisement

சிவகார்திகேயன் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புதுப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படம் சிவகார்திகேயனின் 20வது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக சென்னை, புதுவை, லண்டன் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மிஸ்டர் லோக்கல் படம் குறித்த விவகாரம்:

இந்த படத்தில் நடிகை மரியா என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை கொடுக்கும் வரை நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களை வெளியிட கூடாது என்றும், படங்களில் முதலீடு செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தடை விதிக்க கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள வழக்கில், சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். இந்த படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் ஓரளவிற்கு மக்கள் மத்தியில் ஓடியது.

Advertisement

ஞானவேல் ராஜா மீது புகார் அளித்த சிவகார்த்திகேயன்:

இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். இந்த படத்திற்காக ஞானவேல்ராஜா 15 கோடி ரூபாய் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் தருவதாக ஒப்பந்தம் செய்து இருந்தார். மேலும், 2019ஆம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில் இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறார். மீதி 4 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதோடு 14 கோடி ரூபாய்க்கான டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா அதை வருமானவரித் துறையில் செலுத்தாததால் 2019-2021 ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகையை 91 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து முன்னரே சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

சிவகார்த்திகேயன் மனுவில் கூறி இருப்பது:

எனவே 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை தனக்கு செலுத்துவதற்கும், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரித் துறையிடம் செலுத்துவதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடவேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்த பணம் செலுத்தும் வரை ஞானவேல் ராஜா தயாரித்து வரும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ரிபெல், விக்ரம் நடிக்கும் படம், சிம்பு படம்,மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்கில் வெளியிடு மற்றும் ஓடிடியில் வெளியிட ஆகியவற்றின் விநியோக உரிமையை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை உள்ளார். இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாளை மறுதினம் மார்ச் 31ஆம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement