பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கு, ஆனால் - நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது ஜிவி பிரகாஷ் உடைய நூறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் வெளியானது. இந்த படம் முழுக்க முழுக்க இந்தி திணிப்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன் குறித்த தகவல்:
இதற்கு காரணம் பராசக்தி படம் வெளியாகுவதற்கு முந்தைய நாள் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாகுவதாக இருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் காரணமாக அந்த படம் வெளியாகவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் பராசக்தி படத்தை விமர்சித்தும் ட்ரோல் செய்தும் இருந்தார்கள். இதை அடுத்து சிவகார்த்திகேயன் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கம் படத்தில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் பேட்டி:
அதை தொடர்ந்து ராதிகா நடிப்பில் வெளியாக இருக்கும் தாய் கிழவி படத்தின் இயக்குனர் சிவகுமார் முருகேசன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் அவர்கள் சினிமா துறையில் தன்னுடைய 14 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இதற்காக பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் அவர்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து இருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=KdLEOx0W8p0
சினிமா பயணம்:
பின் செய்தியாளர்களை சந்தித்த சிவா, நான் சினிமாவில் 14 ஆண்டுகள் நிறைவு செய்ததை எல்லோருமே கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு வருஷம் எனக்கு பொறுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் நிறைய சில விஷயங்கள் செய்ய வேண்டும். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. இந்த பயணத்தில் நிறைய கஷ்டங்கள் தோல்விகள் இருக்கும். ஆனால், அதை தாண்டி மக்கள் கொடுக்கும் அன்பை மட்டும் பார்க்க வேண்டும். அடுத்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். எல்லோரும் என்னிடமிருந்து எந்த மாதிரியான படத்தை எதிர்பார்க்கிறார்களோ அந்த மாதிரியான படமாக அது இருக்கும் என்று கூறியிருக்கிறார்.