'விஜய்யைத் தொடர்ந்து அரசியலுக்கு வருவீங்களா'- செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சிவகார்த்திகேயன் நச் பதில்

By Rajkumar · 29/10/2024

அரசியல் என்ட்ரி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்விக்கு, சிவகார்த்திகேயன் அளித்திருக்கும் பதில் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த 'அயலான்' படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

அதைத்தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அமரன்' படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. மேலும், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி போன்ற பழமொழிகளில் வெளியிட தயாராக உள்ளது.

அமரன் படம்:

இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால், தற்போது இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், கோவையில் உள்ள கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அமரன் ப்ரோமோஷன்:

முதலில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அமரன் திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ஒளிபரக்கப்பட்டது. தொடர்ந்து படம் குறித்து சிவகார்த்திகேயன் மாணவர்களிடம் உரையாடினார். அப்போது, 'ஆர்மி உடையை கடைசியாக போடும் போது நினைவாக இருக்கட்டும் என்று வீட்டுக்கு கொண்டு சென்றுவிட்டேன்' என்றும் 'உடையை விட முகுந்த் என்ற பெயர் எனக்கு ரொம்ப பிடித்தது' என்றும் கூறினார். மேலும், ஆர்மி உடையை அணிந்த பிறகு தனக்குள் சின்ன சின்ன மாற்றங்கள் வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் பேசியது:

மேலும், காமெடி, கலாய்ப்பது என்பது கூடவே பிறந்து விட்டது என்றும், படப்பிடிப்பு சீரியசாக இருக்கும் போது நான் கொஞ்சம் தான் ஜாலியாக இருப்பேன் என்றும், இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னர் முதலில் மனரீதியாக தன்னை தயார்படுத்திக் கொண்டதாகவும், பின்னர் உடலை தயார் செய்தேன் என்று சிவா கூறியுள்ளார். உடல் வலிமை இருந்தால் தான், இந்த படத்தில் நடிக்க சரியாக இருக்க முடியும். இந்த படத்திற்காக ஜிம் சென்றத்தில் உடலில் கட்டி கட்டியாக உள்ளது என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=FNafGfySmfM

செய்தியாளர்களை சந்தித்த சிவா:

நிகழிச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஜய் அரசியலுக்கு வந்தது போல் நீங்களும் வருவீர்களா என்ற கேள்விக்கு, 'கோட்' படத்தில் வந்த அந்த துப்பாக்கி காட்சியை சினிமாவில் நடந்த ஒரு அழகான நிகழ்வாக தான் நான் பார்க்கிறேன். ஒரு சீனியர் ஆக்டர், இன்னொரு ஆக்டர் கூட ஸ்கிரீன் ஷேர் பண்ணாரு. அது அழகா இருந்தது. அப்படித்தான் நான் பார்க்கிறேன். சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. எனவே அரசியலுக்கு வருவதை பின்னர் பார்ப்போம் என்பது போல் சிவா பதிலளித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full