'போர் செல்லும் வீரன்' அமரன் படத்தில் கமல் பாடியுள்ள பாடல்- வெளியான புரோமோ இதோ

By Rajkumar · 14/8/2024

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' திரைப்படத்தின் ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே கோடிகளில் சம்பளம் வாங்கும் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் 'அமரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தினுடைய டீசர் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது.

அமரன் படத்தின் உடைய டீசர்:

இந்த படத்தினுடைய டீசரில், 44 ராஷ்ட்ரிய ரைப்பில் படை பற்றிய வசனங்களும், தீவிரவாதிகளுடன் சண்டை காட்சிகளும் காட்டப்பட்டிருந்தது. இதன் மூலம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. மேலும், இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று ட்ரெண்டிங் ஆகி இருந்தது.

https://www.youtube.com/watch?v=YkFaDqi2ueM

போராட்டம் நடந்தது:

இந்த படத்தின் டீசர் வெளியானதும், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் திருச்சியில் அமரன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். அது மட்டும் இல்லாமல் அந்தப் போராட்டத்தில் அமரன் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் கமல்ஹாசன், இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி இருந்தார்கள். டீசரின் காட்சிகள் இந்தியாவின் ஒற்றுமையை சீரழிக்கும் வகையில் இருப்பதாக போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

படத்தின் டிரைலர்:

மேலும், காஷ்மீரில் இப்படத்தின் ஏராளமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதை அடுத்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி இப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்தத் திட்டத்தை படக்குழு வைத்துள்ளதாம்.

அமரன் ப்ரோமோ:

தற்போது, நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று அமரன் படத்தின் ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்தப் ப்ரோவில், 'போர் சொல்லும் வீரன்' என்ற கமல் பாடி உள்ள பாடலும் இடம்பெற்றுள்ளது. இந்த ப்ரோமோ விடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில், Let’s remember the battles, struggles, and sacrifices! என்ற கேப்ஷனை குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். தற்போது இந்த 'அமரன்' திரைப்படத்தின் ஸ்பெஷல் ப்ரோமோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full