எனக்கு இன்ஸ்பிரேஷனே சிவகார்த்திகேயன் தான்-நிகழ்ச்சியில் தெலுங்கு பிரபல நடிகை சொன்ன தகவல்

By subhashini · 25/3/2024

எனக்கு இன்ஸ்பிரேஷனே சிவகார்த்திகேயன் தான் என்று பிரபல தெலுங்கு நடிகை புகழ்ந்து பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஸ்ரீலீலா. இவர் அமெரிக்காவில் பிறந்தார். ஆனால், வளர்ந்ததெல்லாம் பெங்களூரில் தான். இவர் மருத்துவம் படித்து முடித்திருக்கிறார். இருந்தாலும், இவருக்கு சிறுவயதில் இருந்து சினிமாவின் மீது அதிக ஆர்வம் என்பதால் நடிக்க வந்து விட்டார்.

இவர் 2019 ஆம் ஆண்டு கன்னட மொழி படத்தின் மூலம் தான் அறிமுகமாகி இருந்தார். இருந்தாலும், இவர் தெலுங்கில் தான் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக, ரவி தேஜா உடன் இவர் இணைந்து நடித்த தமாகா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இவர் மகேஷ்பாபு, பவன் கல்யாண், நந்தமுரி பாலகிருஷ்ணா, விஜய் தேவர்கொண்டா போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

கல்லூரி விழாவில் சிவகார்த்திகேயன்-ஸ்ரீலீலா:

தற்போது இவர் தமிழிலும் சில படங்களில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் அந்த படம் குறித்து அப்டேட் வெளியாகும். மேலும், இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் சூப்பராக நடனமும் ஆடுவார். இவருடைய நடனத்திற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த நிலையில் விழா ஒன்றில் சிவகார்த்திகேயன் குறித்து ஸ்ரீலீலா பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டிருந்தார்.

சிவகார்த்திகேயன் குறித்து சொன்னது:

இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலாவும் கலந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் தெலுங்கில் பேசி இருந்தார். அவர் பேசியதை கேட்டு ரசிகர்கள் பலருமே குஷி ஆகி விட்டார்கள். பின் நடிகை ஸ்ரீலீலா, அவர் தெலுங்கில் சரியாக தான் பேசுகிறார். என்னுடைய வாழ்க்கை மற்றும் சினிமா பயணத்திற்கு எனக்கு ரொம்ப இன்ஸ்பிரேஷன் ஆக இருப்பது சிவகார்த்திகேயன் தான் என்று கூறி சமீபத்தில் ஸ்ரீலிலா- மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு இணைந்து நடனமாடி இருக்கிறார்கள்.

ரசிகர்கள் கருத்து:

தற்போது இந்த வீடியோ தான் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள், இருவரும் சேர்ந்து நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:

பல சிரமங்களுக்கு மத்தியில் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளிவந்த இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை கமலஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். அதோடு இன்னும் சில படங்களில் சிவா நடிக்க இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full