உங்களை மிஸ் பண்றோம் - தன் சம்பளத்தை நா. முத்துகுமார் குடும்பத்திற்கு கொடுத்த சிவகார்த்திகேயன்
விழாவில் நா.முத்துக்குமார் பற்றி சிவகார்த்திகேயன் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற பாடல் ஆசிரியராக இருந்தவர். நா முத்துக்குமார்.இவருடைய பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. உடல்நல குழையவால் சில வருடங்களுக்கு முன்பு இவர் இறந்தது தமிழ் சினிமா உலகில் பேர் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.
இவர் மறைந்தாலும் இவருடைய பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் மறைந்த பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமார் உடைய நினைவை போற்றும் வகையில் சென்னையில் 'ஆனந்த யாழை' என்ற தலைப்பில் மாபெரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இதில் பராசக்தி படத்தின் சூட்டிங் முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
விழாவில் சிவகார்த்திகேயன்:
அப்போது விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், முதல் முறையாக நெல்சன் என்னை பாட்டு எழுத அழைத்திருந்தார். அவர் சொன்ன போது நான் சும்மா ஜாலியாக ஒரு பாட்டு எழுதினேன். அதில் எந்த அர்த்தமுமே இல்லை. ஆனால், அந்த வேலையை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு சம்பளமாக ஏதாவது கொடுங்கள் என்றும் கேட்டேன். அந்த பணத்தை தான் நான் நா.முத்துக்குமார் சார் உடைய குடும்பத்திற்கு கொடுத்தேன். இதை நான் உதவியாக செய்யவில்லை. என்னுடைய கடமை.
நா.முத்துக்குமார் பற்றி சொன்னது:
நா. முத்துக்குமார் சார் இயக்குனர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு, நடிகர்களுக்கு, ரசிகர்களுக்கு என எல்லோருக்குமே தன்னுடைய தமிழையும் கவிதையும் ஆற்றலையும் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். அவருக்கு திருப்பி செய்யும் கடமைதான் இந்த நிகழ்வு. நா.முத்துக்குமார் சார் உங்களை இந்த சினிமா, இசையமைப்பாளர்கள், இந்த குடும்பம் எல்லோருமே ரொம்ப மிஸ் செய்கிறோம். நீங்கள் தொடவேண்டிய பாடல்கள் எல்லாம் ஒரு தலை காதலாக மட்டும் இருந்து வேறு ஒருத்தரை மணந்து போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். நிறைய நல்ல பாடல் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
சினிமா பற்றி சொன்னது:
அவர்கள் மீது நான் எந்த குறையும் சொல்லவில்லை. ஆனால், உங்களை மாதிரி எழுத இன்னொருவர் பிறப்பாரா என்று தெரியவில்லை. உங்களைத் தொடர்ந்து உங்கள் மகன் பாட்டு எழுத வரவேண்டும். நீங்கள் இல்லாததால் நிறைய கொடுமை நடக்கிறது. நானெல்லாம் பாட்டு எழுதுகிறேன். ஆனால், ஒவ்வொரு முறை பாட்டு எழுதும் போதும் உங்களுடைய இரு பாடலை கேட்டு விட்டு தான் நான் ஆரம்பிப்பேன் என்று பேசி இருக்கிறார். இப்படி சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடும் பின்னணியும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார்.