நான் விஜய் டிவில இருந்த போது 4500 கொடுத்தாங்க, ஆனா இப்போ பாலா எல்லாம் - SK கலகல பேச்சு
தனது மாமனார் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பெருமையாக பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயின் ஆக நடித்துள்ள படம் தான் 'நேசிப்பாயா'. இப்படத்தில் நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகம் ஆகி இருக்கிறார். இப்படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று ரிலீஸ் ஆகும் என்ன அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த படத்தின் கதாநாயகன் ஆகாஷ் முரளி தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளை தான் காதலித்து திருமணம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரோடு அதர்வா, நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், முதலில் படக்குழுவினரை வாழ்த்தி விட்டு பின், படத்தின் கதாநாயகன் ஆகாஷ் முரளிக்கு சிறந்த மாமனார் கிடைத்திருக்கிறார் என்பது போல் சில விஷயங்களை பேசும்போது தனது மாமனார் குறித்தும் பேசி இருக்கிறார்.
4500 ரூபாய் கிடைக்கும்:
அதில், எனக்கு என்னுடைய மாமனார் ரொம்ப ஸ்பெஷல். எனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம். என்னுடைய தாய் மாமா தான் அவங்க. இருந்தாலும், எனக்கு நிரந்தரமான வேலையோ எதுவும் இல்லை. டெலிவிஷன்ல இருந்த ஆங்கர், ஒரு எபிசோடு பண்ணா 4500 ரூபாய் கிடைக்கும். இப்போ பாலா, ஏஞ்சலின் எல்லாம் நிறைய வாங்குறாங்க. ஏன்னா, விஜய் டிவி நல்லா வளர்ந்துடுச்சு. எனக்கு தெரிஞ்சு இந்த விழாவிற்கு இவங்க லட்சக்கணக்கில் தான் வாங்கி இருப்பாங்க என்று நினைக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=JAPPGc7K6mg
மாமனார் குறித்து :
அப்போ எல்லாம் 4500 தான் குடுப்பாங்க. என் மாமனார் என்ன சொன்னார் என்றால், பரவால்ல ஏதோ ஒன்னு பண்ணனும் நினைக்கிறான். மெட்ராஸ் போய் பிழைக்கிறதே பெரிய விஷயம். அவன் சினிமாவுக்கு போகணும்னு நினைக்கிறான். சப்போர்ட் பண்ணுவோம் என்று சொன்னாரு. நான் இந்த மேடையை பார்க்கும் போது என்னுடைய மனோகர் மாமாவிற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்தான் எனக்கு தைரியமாக சப்போர்ட் பண்ணது. போடா, ஏதாவது ஒன்னு முயற்சி பண்ணுடா, பார்த்துக்கலாம் என்று சொன்னார்.
எங்களுக்காக வேலையை விட்டார் :
ஏனென்றால், என்னுடைய மாமாவிற்கு 43 வயதில் ஹார்ட் அட்டாக் வந்தது. அப்போ அவர் பிசினஸ் எல்லாம் விட்டுட்டாரு. ஏனென்றால், அவருக்கு இரண்டு பொண்ணு. அந்த ரெண்டு பொண்ணுங்களையும் பார்த்துக்கணும். அந்த டைம்ல தான் என்னுடைய அப்பாவும் இறந்தார். அதனால் என்னுடைய அக்காவிற்கு இரண்டு பசங்க இருக்காங்க, எனக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க. வேலை வேலை என்று என் உயிருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. இவங்களையெல்லாம் பார்த்துக்க நான் இருக்கனும் என்று அவர் வேலையை விட்டார்.
ஆகாஷுக்கும் நல்ல மாமனார் :
மேலும், அவரு, என் பொண்ணை கட்டிக் கொண்டிருக்கிறேன் என்று என்னை ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று சொல்லாமல், என் கனவை நோக்கி பயணிக்க சொன்னார். எனக்கு கிடைத்திருக்கும் மாதிரி இந்தப் படத்தின் நாயகன் ஆகாஷ் இருக்கும் ஒரு மாமனார் கிடைத்திருக்கிறார். மாமனார் என்பது ஒரு அழகான உறவு என்று சிவகார்த்திகேயன் எமோஷனலாக பேசியிருக்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது மாமனார் குறித்து நேசிப்பாயா ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியிருக்கும் வீடியோ தான் வைரல் ஆகி வருகிறது.