இதனால் தான் சிவகார்த்திகேயனுக்கு அனிமல் படம் புடிச்சிருக்கு - அனிமல் பட காட்சியை பகிர்ந்து கலாய்க்கும் நெட்டிசன்கள்.

By subhashini · 6/3/2024

கடந்த ஆண்டு ஹிந்தியில் ராஷ்மிகா மந்தனா-ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் அனிமல். இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருந்தார். டி சீரீஸ் ஃபிலிம்ஸ், பத்ரகாலி பிக்சர்ஸ் மற்றும் இனி ஒன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. தந்தை மகனுக்கு இடையே இருக்கும் உறவை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

https://twitter.com/kollycensor/status/1765276245292650758?s=48

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. அதோடு இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா பயங்கர கிளாமராக நடித்து இருக்கிறார். இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழி ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த படம் வெளியாகி 900 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சிலர் இந்த படம் பெண்களுக்கு எதிரானது, இந்த படம் ஆண் சிந்தனை இருப்பதாக விமர்சித்திருக்கின்றார்கள்.

அனிமல் குறித்த விமர்சனம்:

இந்த படம் குறித்து பிரபலங்கள் பலருமே விமர்சித்து இருந்தார்கள். அந்த வகையில் ஆர் ஜே பாலாஜி, இந்த படத்துக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு யாரும் தியேட்டரில் பார்க்க வேண்டாம். இப்படி எல்லாம் மோசமாக ஒரு படத்தை எடுக்க வேண்டாம். அதனால் தான் நான் படம் பார்க்க வில்லை என்று கூறியிருந்தார். அதேபோல் குஷ்பூ, என்னுடைய மகள்கள் அனிமல் படத்தை பார்த்துவிட்டு தயவு செய்து இந்த படத்தை பார்க்காதீர்கள் என்று எனக்கு சொன்னார்கள்.

https://twitter.com/rameshsuriyaa__/status/1764998730158424497?s=48

சிவா பேட்டி:

அந்த அளவிற்கு மோசமாக படம் இருக்கிறது என்று பலருமே விமர்சித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அனிமல் படத்தை பாராட்டி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, சமீபத்தில் ஒரு பிரபல ஊடகம் நடத்திய இன்டர்வியூவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டிருந்தார். அதில் அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவும் கலந்து இருந்தார். அப்போது சிவா, அனிமல் படம் நன்றாக இருக்கிறது.

அனிமல் படம் குறித்து சொன்னது:

படத்தை விட சந்தீப் உடைய நேர்காணல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. படத்தை விட நிஜத்தில் அவர் நேர்மை, வெளிப்படையாக இருக்கிறார் என்றெல்லாம் பேசி இருந்தார். இப்படி சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அவரை கிண்டல் அடித்தும் வருகிறார்கள். அதிலும் சிலர் அனிமல் படத்தின் உடைய கிளைமாக்ஸ் காட்சியில், அண்ணி உங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. அதனால் நான் பார்த்துக் கொள்கிறேன்.

https://twitter.com/splogesh/status/1765123847429542255?s=48

சிவகார்த்திகேயன் குறித்த தகவல்:

நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறுவது போல ஒரு காட்சி வரும். இதை இமான் விவகாரத்துடன் ஒப்பிட்டு இதற்காக தான் சிவகார்த்திகேயனுக்கு அனிமல் படம் பிடித்திருக்கும் போல என்றெல்லாம் ட்ரோல் செய்து வருகிறாரல்கள். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி இருந்த அயலான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் என்ற படம் உருவாகி இருக்கிறது. இதை அடுத்து இவர் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full