1500 வருட பழமை கோயில்: நடிகர் சிவகார்த்திகேயனும் சென்று இருக்கிறாரா? கோயில் சிறப்பம்சங்கள் இதோ

By subhashini · 24/1/2025

தஞ்சை பரிதியப்பர் கோவிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்று இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை சாலையில் மேல உளூர் என்ற கிராமம் இருக்கிறது. இந்த ஊரின் உடைய மையப்பகுதியில் தான் பரிதிநியமம் பரிதியப்பர் கோவில் (பாஸ்கரேசுவரர் கோயில்) இருக்கிறது. இந்த தலம் தேவாரப் பாடலில் இடம் பெற்று இருக்கிறது. சோழநாடு காவிரி தென்கரை தலங்களில் 101 வது சிவத்தலம் ஆகும். இந்த கோயிலை பருத்தியப்பர் கோயில் என்றும் அழைக்கிறார்கள். இது சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பழமையான கோயில்.

பரிதி என்று அழைக்கப்படுபவர் சூரியன். இவர் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதில் இருந்து விடுபட இவர் சிவபெருமானை வேண்டுகிறார். அப்போது சிவன், இந்த தளத்தில் தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்கம் அமைத்து என்னை வழிப்பட்டால் நோய் விலகும் என்று கூறியிருக்கிறார். சூரியனும் அதன்படியே செய்திருக்கிறார். அதன் பின் அவருடைய நோயும் விலகி விட்டது. இதனால் இங்குள்ள கடவுளை பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மேலும், இந்த தளத்திற்கு இன்னொரு வரலாறும் இருக்கிறது.

பரிதியப்பர் கோயில்:

ராமபிரானின் முன்னோர்களான சூரிய குளத்தில் தோன்றிய சிபி சக்கரவர்த்தி, வயதான காலத்தில் தன்னுடைய மகனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சிவதலங்களை தரிசிக்க புறப்பட்டு இருக்கிறார். அப்போது இந்த இடத்திற்கு வந்ததும் அசதியின் காரணமாக இளைப்பாறி இருக்கிறார். அந்த சமயத்தில் குதிரை சேவகன், குதிரைக்கு புல் சேகரித்துக் கொண்டிருக்கிறார். புல்லுக்காக பூமியை தோன்றிய போது அவன் கையில் இருந்த ஆயுதம் சூரியனால் அமைக்கப்பட்டு பூமிக்குள் இருந்த லிங்கத்தின் மீது பட்டது.

கோயில் சிறப்பம்சம்:

உடனே லிங்கத்திலிருந்து ரத்தம் வந்தது. இதனை அறிந்த மன்னன் அந்த இடத்தை தோண்டுமாறு உத்தரவிட்டிருக்கிறார். உள்ளிருந்து சூரிய லிங்கம் வெளிப்பட்டது. அதற்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபட்டார்கள். இதே நினைவுபடுத்தும் வகையில் இன்றும் கூட சிவலிங்கத்தில் ரத்த வடு இருக்கிறது.
இந்த லிங்கம் இந்த இடத்திற்கு எப்படி வந்தது என்பதை முனிவர் ஒருவர் மூலம் அறிந்து, அந்த இடத்தில் கோயில் கட்டினான். பின் சூரியனால் அமைக்கப்பட்ட லிங்கம் சூரிய குல மன்னனால் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.

சிவகார்திகேயன் கோயில் தரிசனம்:

இந்த லிங்கத்திற்கு சூரிய பகவான் வருடம் வருடம் பங்குனி மாதம் 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறார். எந்தவிதமான தோசமாக இருந்தாலும் இந்த ஆலயத்திற்கு வந்து சிவபெருமானை தரிசிப்பதன் மூலம் தோஷம் விலகும் என்றார்கள். தீராத நோய்கள் இருப்பவர்கள், நினைத்த காரியம் நிறைவேற, ஒரு தொழிலை தொடங்க நினைப்பவர்கள் என எந்தவித வேண்டுதலாக இருந்தாலுமே இந்த கோயிலுக்கு வந்து வழிபடுவதன் மூலம் அது நிவர்த்தி ஆகிறது. தமிழக முழுவதும் பல ஊர்களில் இருந்து இந்த கோயிலுக்கு வந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலருமே இந்த கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

சிவகார்திகேயன் குறித்த தகவல்:

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கடந்த ஜனவரி 7ஆம் தேதி தான் இந்த கோயிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்று வழிபட்டு இருக்கிறார். சிவகார்த்திகேயன் கடவுள் நம்பிக்கை நிறைய கொண்டவர். கிடைக்கும் நேரத்தில் எல்லாம் இவர் கோயிலுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். பழமையான கோயில்களின் சிறப்பம்சங்களை அறிவதிலும் அவர் நிறைய ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full