நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம், ஏன் அரசியலுக்கு வரனும்- நடிகர் சிவராஜ்குமார் ஓபன் டாக்
விஜய் அரசியல் பற்றி நடிகர் சிவராஜ்குமார் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட மொழியில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவராஜ் குமார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் தற்போது சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 45.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் உபேந்திரா நடித்திருக்கிறார். இந்த படத்தை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா தான் இயக்கி இருக்கிறார். அதேபோல் ராஜ் பி. ஷெட்டி இந்த படத்தில் முக்கிய இடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.
சிவராஜ்குமார் பேட்டி:
அதில் கலந்து கொண்ட சிவராஜ்குமாரிடம் செய்தியாளர் ஒருவர், தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து நட்சத்திர நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், விஜய் உட்பட பலர் அரசியலில் களம் இரங்கி இருக்கிறார்கள். அதே போல் கர்நாடகாவில் இருக்கும் நீங்கள், உபேந்திரா சார் எல்லாம் அரசியலுக்கு வரவில்லை. ஏன்? என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு சிவராஜ்குமார், அரசியலைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
அரசியல் பற்றி சொன்னது:
மக்களுக்கு என்ன பண்ண வேண்டுமோ அதை நான் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறேன். நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்யலாம். மக்களுக்கு நல்லது செய்ய நடிகர்களுக்கு அதிகாரம் அவசியமில்லை. நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாமே. இதற்கு ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? இது என்னுடைய பணம். யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்வேன் என்று பேசியிருக்கிறார். இப்படி இவர் பேசியிருப்பது விஜய் அரசியலுக்கு வந்ததை தாக்கி தான் பேசி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=HrXSHQ7kerA
விஜய் அரசியல்:
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். ஜனநாயஜன் படத்திற்கு பிறகு விஜய் அவர்கள் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருந்தது மக்கள் அனைவருக்கும் தெரிந்ததே.கடந்த ஆண்டு விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சி பெயரை வைத்து இருந்தார். தற்போது விஜய் தன் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.