இவ்வளவு அன்பு கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ - நெகிழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா போட்ட பதிவு
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் எஸ் ஜே சூர்யா. இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் நடிகராகவதற்கு முன்பு மிகப்பிரபலமான இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கிய அஜித்தின் வாலி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.
அதன் பின் இவர் விஜய்யின் குஷி படத்தை இயக்கி இருந்தார். இப்படி இவர் படங்களின் மூலம் தான் பல முன்னணி நடிகர்களின் வாழ்க்கையே உச்சத்திற்கு மாறியது என்று சொல்லலாம். அதற்கு பிறகு இவர் நியூ, அன்பே ஆருயிரே, பிறகு காதலி போன்ற பல படங்களை நடித்தும், தயாரித்தும் இருந்தார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா அவர்கள் இசை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார்.
எஸ்.ஜே.சூர்யா திரைப்பயணம்:
இந்த படங்கள் மூலம் ரசிகர்களிடையே இவருக்கு பெருத்த வரவேற்பு கிடைத்து இருந்தது. அதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். அதிலும் மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு, டான் போன்ற படங்களில் எல்லாம் இவரின் நடிப்பு மிக பெரிய அளவில் பேசப்பட்டது. கடந்த ஆண்டு இவர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை டிவிவி தனய்யா தயாரித்திருந்தார்.
எஸ்.ஜே.சூர்யா படங்கள்:
இந்த படத்தில் நானி, ப்ரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, அதிதி பாலன், சாய்குமார், சுபலேகா சுதாகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இதை அடுத்து கடைசியாக தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகியிருந்த வீர தீர சூரன் என்ற படத்தில் எஸ்.ஜே சூர்யா போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருந்தார். இதை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
மீண்டும் இயக்குனர்:
இந்த நிலையில் தற்போது இவர் பத்து வருடங்களுக்கு பிறகு இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கிறார். இவர் கில்லர் என்ற படத்தை தான் இயக்கி நடிக்கிறார். இந்த படத்தில் அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அஸ்ராணி ஹீரோயினாக நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தான் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எஸ்.ஜே சூர்யா வெளியிட்டு இருந்தார். தற்போது இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து எஸ்.ஜே சூர்யா, கில்லர் படத்தின் மூலம் இயக்குனராக என்னுடைய பயணத்தை தொடங்க இருக்கிறேன்.
Thx to all my industry friends, press&media friends & Yen ANBUM AARUYIRUMANA all my fans & well-wishers U all together supported and showered immense love on me 🥰🥰🥰🥰🥰🥰when I announced my directorial venture #killer …. Yenna dhavam seithen indha ANBU kidaipatharku 🥰🙏🙏🙏…
— S J Suryah (@iam_SJSuryah) June 30, 2025
எஸ்.ஜே.சூர்யா பதிவு:
எனக்கு அபரிதமான அன்பை கொடுத்த என்னுடைய சினிமா நண்பர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பைப் பொழிந்து ஆதரவழிக்கிறீர்கள். இந்த அன்பு கிடைப்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ? ஹில்லர் படம் தொடர்பாக விரைவில் அப்டேட் வரும் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து படத்தினுடைய ஹீரோயினி ப்ரீத்தி, இது ஒரு அழகான தொடக்கம். எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும். எஸ். ஜே. சூர்யா சார் உடன் இணைந்து புதிய பயணத்தின் பூஜை தொடங்கி இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.