கஷ்டங்களும் தியாகங்களும் நிறைந்த பல ஆண்டு உழைப்பின் பலன் - நடிகர் சூரியின் உருக்கமான பதிவு
தேசிய விருது வாங்கிய எம்.எஸ் பாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சூரி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வருடம் வருடம் இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு தான் தொடங்கி இருந்தார்கள். தற்போது 71 ஆவது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற்றது. இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட படங்களுக்கு தான் இந்த விருது வழங்கப்பட்டது.
https://www.youtube.com/watch?v=KDIHREWeBwg
இதில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை பார்க்கிங் படம் பிடித்தது. பின் பார்க்கிங் படத்தின் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் எம்.எஸ் பாஸ்கர் பெற்றிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தான் டெல்லியில் குடியரசுத் தலைவர் கையால் இந்த விருதை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் வாங்கி இருக்கிறார். விருதை வாங்கிய பிறகு சென்னை திரும்பியவுடன் எம்.எஸ் பாஸ்கர் அவர்கள் நடிகர் சிவாஜி திலகம் இல்லத்திற்கு சென்று தேசிய விருதினை சிவாஜி படம் முன் வைத்து வணங்கி இருக்கிறார்.
தேசிய விருது வாங்கிய பாஸ்கர்:
அதற்கு பிறகு கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று இருக்கிறார். தேசிய விருது வாங்கிய எம்.எஸ். பாஸ்கருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், கஷ்டங்களும் தியாகங்களும் நிறைந்த பல ஆண்டுகளின் உழைப்பின் பலன் இன்று தேசிய விருதாக மலர்ந்துள்ளது. இவருடைய பயணம் எனக்கு ஒரு பெரிய பாடமாகவும் ஊக்கமாகவும் உள்ளது.
சூரி பதிவு:
இதே துறையில் பணிபுரிந்து இத்தகைய சிறந்த கலைஞரை கொண்டாடுவதில் பெருமை கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இவருடைய இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. காரணம், சூரியும் இப்படித்தான் சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது ஹீரோ என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறார். மேலும், எம் எஸ் பாஸ்கர் அவர்கள் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர் குறித்த தகவல்:
இவர் மிக அற்புதமான நடிகர். 1987 ஆம் ஆண்டு தான் இவர் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் அதற்கு பிறகு 2004 ஆம் ஆண்டு எங்கள் அண்ணா படத்தின் மூலம் தான் இவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. அதனை தொடர்ந்து இவருடைய நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இவர் வில்லன், குணச்சித்திரம், காமெடி என அனைத்திலும் தூள் கிளப்பி இருக்கிறார். சமீப காலமாக இவருடைய நடிப்பில் வெளிவந்த பார்க்கிங், டூரிஸ்ட் பேமிலி படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.