ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்ட விவகாரம் முதல் விஜய் அரசியல் வரை - நடிகர் சூரி அளித்த பளீச் பதில்

By subhashini · 19/5/2025

மாமன் படம் ரிலீசுக்கு பின் சூரி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக இருந்து ஹீரோவாக கலக்கி கொண்டிருப்பவர் சூரி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமன். இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படம் தாய்மாமன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று சூரி உ டைய ரசிகர்கள் சில பேர் மண் சோறு எல்லாம் சாப்பிட்டு இருந்தார்கள். இதனால் இதை கண்டித்து நடிகர் சூரி பேட்டி அளித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள ரேடியன்ஸ் திரையரங்கிற்கு நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள் ரசிகர்களுடன் சேர்ந்து மாமன் படத்தை பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி, குடும்பம் சார்ந்த படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டு விட்டது.

மாமன் படம்:

தமிழ்நாட்டில் உள்ள எல்லா திரையரங்குகள் முழுவதும் குடும்பம் குடும்பமாக மாமன் படத்தை பார்த்து வருகிறார்கள். மாமன் படம் ஒரு நல்ல வெற்றி படமாக மக்கள் மத்தியில் சேர்ந்து உள்ளது. 10, 15 பேர் குடும்பம் குடும்பமாக வந்து இந்த படத்தை பார்த்து செல்வதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறுகிறார்கள். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கணவன் மனைவி உட்பட எல்லோருமே படம் பார்த்து கண்ணீர் விட்டு அழுகிறார்கள். இது எங்கள் படத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம். மேலும், என்னுடைய படம் வெற்றி பெற சில ரசிகர்கள், மண் சோறு சாப்பிட்டதாக கேள்விப்பட்டேன்.

https://www.youtube.com/watch?v=RCDNJE1y-d8

சூரி பேட்டி:

அது ரொம்ப தவறான செயல். என் பிள்ளைகள் இப்படி செய்தால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். படத்தை கொண்டாடுங்கள், சந்தோஷப்படுங்கள். படத்தை கொண்டாடுவதற்கு நிறைய வழி இருக்கிறது. எந்த ஒரு நடிகரும் இப்படி கொண்டாடுங்கள் என்று சொல்வது கிடையாது. மக்களை எப்படி சந்தோஷப்படுத்த வேண்டும், நல்ல கதைகளை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய முழு கவனமும் இருக்கிறது. எனக்கு போட்டி, நான் எந்த மாதிரியான படங்கள் பண்ணனும், எப்படி அதை மக்களிடம் கொண்டு சேர்க்கணும் என்பது மட்டும்தான். காசு கொடுத்து வருகிறவர்கள் சந்தோஷமாக போற மாதிரி தான் என்னுடைய படங்கள் இருக்கணும் என்று நான் யோசிப்பேன். அதுதான் என்னுடைய கனவு.

படம் பற்றி சொன்னது:

விடுதலை ஹிட் ஆனது. அடுத்து கருடன் படமும் பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்போ மாமன் படத்திற்க்கும் மிகப்பெரிய ஒரு வெற்றி கிடைத்து இருக்கிறது. அடுத்து என்னுடைய போட்டி மண்டாடி படத்துடன் தான். அதுவும் உங்க எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். சந்தானமும் மற்ற நடிகர்களுடன் எனக்கு எந்த போட்டியும் கிடையாது. மேலும், இது போன்ற படங்கள் யாரேனும் ஒருவர் கொடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். நமக்காக இயக்குவதற்கு நிறைய இயக்குனர்கள் இருக்கிறார்கள். நடிக்க நானும் தயாராக இருக்கிறேன். முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதால் பொறுப்புகள் அதிகமாக இருக்கிறது.

விஜய் அரசியல்:

மேலும், விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக நிறைய கேள்விகள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவர் அரசியலுக்கு வந்தது நல்ல விஷயம்தான். ஆனால், 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்காக பிரச்சாரம் செய்வீர்களா? என்றெல்லாம் கேட்கிறார்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. கிடைத்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள நான் போராடுவேன். இன்னும் நிறைய தூரம் நான் செல்ல வேண்டி இருக்கிறது. இப்போது மண்ணின் மைந்தனாக சினிமாவில் பயணித்து வருகிறேன். நீங்கள் எதிர்பார்ப்பது எப்போது நடக்கும் என்று எனக்கே தெரியாது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full