பிளாக்பஸ்டர் ஹிட்டான சூரியின் 'மாமன்' திரைப்படம் ZEE5ல் ரீலிஸா - உற்சாகத்தில் ரசிகர்கள்

By subhashini · 27/6/2025

சூரியின் மாமன் படம் ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக இருந்து ஹீரோவாக கலக்கி கொண்டிருப்பவர் சூரி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை எல்லாம் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் மாமன். இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் தாய்மாமன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், மாமன் படம் வெளியான அன்று தான் சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாகியிருந்தது. இருந்தாலும் முதல் நாளிலேயே மாமன் படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வசூலித்தது.

மாமன் படம்:

இந்த படம் இதுவரை மொத்தமாக 45 கோடி வசூல் செய்திருக்கிறது. அதோடு சூரியின் கேரியரிலேயே இந்த படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் மாமன் திரைப்படத்தை ZEE5 தளம் விரைவில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சி, விரைவில் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் திரைப்படமான “மாமன்” திரைப்படத்தை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. ஃபேமிலி எண்டர்டெயினரான மாமன் படம், குடும்ப உறவுகளின் உணர்வுகளை அழகாகப் பேசியுள்ளது.

படம் குறித்த தகவல்:

இந்தப் படத்தில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஸ்வாசிகா என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் லட்டுவாக குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவன் கலக்கியுள்ளார். மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில், பிரத்தியேகமாக உலக டிஜிட்டல் பிரீமியராக வெளியிடப்பட உள்ளது. இப்படம் மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

படம் ZEE5ல் ரிலீஸ்:

இப்படம் மருமகனுக்கான உயிரைத்தரத் தயாராக இருக்கும் மாமனுக்கும் (சூரி), மருமகன் லட்டுவுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்கிறது. பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு, சகோதரி கிரிஜா (ஸ்வசிகா) க்கு குழந்தை பிறக்கிறது. மாமனும் மருமகனும் பாசமலர்களாகத் திரியும் நிலையில், இன்பா (சூரி), மருத்துவரான ரேகாவை (ஐஸ்வர்யா லட்சுமி) மணக்கிறார். மருமகன் மாமன் மீது வைத்திருக்கும் பாசம், குடும்பத்தில் பெரும் பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது.

படத்தின் கதை:

குடும்ப உறவுகளின் எல்லா பக்கங்களிலும் கோபங்கள் வெடிக்கும்போது, திருமணத்தில் மட்டுமல்ல, முழு குடும்பத்திலும் விரிசல்கள் தெரியத் தொடங்குகின்றன. திருமணத்தில் மட்டுமல்லாது, மொத்த குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை, குடும்ப உறவுகள் எப்படிக் கடந்து வருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. மாமன் குடும்பத்தோடு இணைந்து அனைவரும் ரசித்துப் பார்க்கக் கூடிய அழகான படம்.
மாமன் திரைப்படம் விரைவில் ZEE5 தளம் மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில், பிரத்தியேகமாகப் பார்வையாளர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இப்படத்தின் பிரீமியர் தேதி பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full