சூரியின் பாசப்போராட்டம் 'மாமன்' ஜெயித்ததா? இல்லையா? படம் எப்படி இருக்கு- முழு விமர்சனம் இதோ

By subhashini · 16/5/2025

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக இருந்து ஹீரோவாக கலக்கி கொண்டிருப்பவர் சூரி. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமன். இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் சூரியின் அக்கா தான் சுவாசிகா. இவருக்கு திருமணம் ஆகி பத்தாண்டுகள் கடந்துமே கர்ப்பமாகவில்லை. இதனால் ஊரில் உள்ள அனைவருமே சூரியின் அக்காவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் முதல் முறையாக சுவாசிகா கர்ப்பம் ஆகிறார். இதனால் சூரி தன் அக்காவை பார்த்து பார்த்து கவனித்துக் கொள்கிறார். அதன் பின் ஆண் குழந்தையும் பிறக்கிறது.

தனக்கு மருமகன் பிறந்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் தன்னுடைய ஒட்டுமொத்த அன்பையுமே
சூரி தன்னுடைய மருமகனுக்கு கொடுக்கிறார். காலையில் எழுந்து அவனை குளிப்பாட்டி பள்ளிக்கு அனுப்புவது, அவனை தூங்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது என பெற்றோர்கள் செய்ய வேண்டிய அனைத்து வேலையுமே சூரி செய்கிறார். இதனால் அவன் ஒரு நிமிடம் கூட தன்னுடைய தாய் மாமனை விட்டு பிரியாமல் இருக்கிறான்.

இந்த சூழ்நிலையில் தான் சூரிக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகும் சூரியை விட்டு அவருடைய மருமகன் பிரியாமல் கூடவே இருக்கிறார். ஆரம்பத்தில் இதை ஐஸ்வர்யா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை வருகிறது. சூரிக்கும் ஐஸ்வர்யாவிற்கும் சண்டை ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இருவருமே பிரிய முடிவே எடுக்கிறார்கள். இதனால் உறவுகள் இடையே விரிசல் ஏற்படுகிறது.

மீண்டும் அந்த உறவுகள் இணைந்ததா? சூரி- ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை. படத்தில் கதாநாயகன் சூரி ரொம்ப யதார்த்தமாக தன்னுடைய நடிப்பை கொடுத்திருக்கிறார். அக்காவுக்கு தம்பி ஆகவும், மருமகனுக்கு மாமனாகவும், மனைவிக்கு நல்ல கணவனாகவும் ஒவ்வொரு காட்சியிலும் சூரி சிறப்பாக நடித்தி இருக்கிறார். குறிப்பாக, பாசப் போராட்டத்தில் தவிக்கும் ஒரு ஆண் எப்படி எல்லாம் இருப்பான் என்பதையும் தன்னுடைய நடிப்பின் மூலம் சூரி காண்பித்திருக்கிறார்.

இவரை அடுத்து படத்தில் வரும் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சுவாசிகா இருவரின் நடிப்பும் படத்திற்கு பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது. இவர்கள் இருவருமே தங்களுடைய நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் வேற லெவலில் தூள் கிளப்பி இருக்கிறார்கள். சூரியின் மருமகனாக நடித்த சிறுவனுடைய நடிப்பும் அற்புதமாக இருக்கிறது. இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுமே தங்களுடைய வேலைகளை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் பாச போராட்டத்தை மையமாகக் கொண்டு கதைக்களத்தை எடுத்திருப்பது சிறப்பு. ஆனால், படம் முழுக்க முழுக்க எமோஷனலாக இருப்பதால் கொஞ்சம் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு இன்னும் கொஞ்சம் தெளிவாக கதையை சொல்லி இருக்கலாம். எமோஷனல் காட்சிகள் படத்திற்கு பலமாக இருந்தாலும் சில நேரத்தில் அது பலவீனமாகவே இருக்கிறது. கொஞ்சம் காமெடியும் இருந்திருந்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக 2k கிட்ஸ்க்கு இவ்வளவு எமோஷனல் தேவையா? என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறது.

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவும் இல்லை. இயக்குனர் எடுத்துக்கொண்ட கதைகளத்தை கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார். அதோடு கதாபாத்திரங்களையும் சிறப்பாக தேர்வு செய்து இருக்கிறார். ஒளிப்பதிவு பின்னணி இசை எல்லாமே படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. எடிட்டிங் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் சூரியின் மாமன் படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.

நிறை:

சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா நடிப்பு சிறப்பு

மற்ற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

எமோஷனல் காட்சிகள் அருமை

கதைகளம் ஓகே

பின்னணி இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது

முதல் பாதி நன்றாக இருக்கிறது

குறை:

படம் முழுக்க எமோஷனல் காட்சிகள்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

காமெடி கொஞ்சம் இருந்து இருக்கலாம்

கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

மொத்தத்தில் மாமன் - ஒரு எமோஷனல்

Tamil Behind Talkies AMP · Quick view
View full