இனிமேல் இப்படி நடக்காமல் மிகுந்த கவனத்துடன் இருக்கிறோம் - பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி
தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார் சூரி. இவர் சீரியலில் தான் நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.
இவர் தன்னுடைய விடாமுயற்சினால் தற்போது ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். இவர் முதன் முதலாக தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ என்ற படத்தின் மூலம் தான் ஹீரோ ஆனார். முதல் படமே இவருக்கு மிக பெரிய பெயரை வாங்கி தந்தது. இதை அடுத்து இவர் கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 போன்ற படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்களும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.
சூரி குறித்த தகவல்:
கடைசியாக சூரி நடிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் மாமன்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் தாய்மாமன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தற்போது சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மண்டாடி. இந்த படத்தை இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். இந்த படத்தை எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கிறது.
ரசிகர் பதிவு:
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மகிமா நம்பியார், சுகால் உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். மீனவர்களுடைய படகு ரேசை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் ரசிகர் ஒருவர் நடிகர் சூரியை சோசியல் மீடியாவில் டேக் செய்து, அன்புள்ள சூரி அண்ணா உங்கள் பட சூட்டிங் எங்கள் ஊரில் நடப்பது எங்களுக்கு சந்தோசமாக இருக்கிறது. இரவு நேர படப்பிடிப்பில் வேடிக்கை பார்க்க வரும் எங்கள் பகுதி மக்களிடம் உங்களுடைய பவுன்சர்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்.
சூரி பதிவு:
தயாரிப்பு நிறுவனத்திடம் கொஞ்சம் சொல்லி வைக்கவும் நன்றிகள் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த நடிகர் சூரி, தம்பி உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதை தயாரிப்பு குழுவிடமும் பவுன்சர் சகோதரரிடம் தெரிவித்து இனி மிகுந்த கவனத்துடன் இருக்க சொல்கிறோம். எப்போதும் போல உங்கள் அன்பே எங்களுக்கு பலம். மீண்டும் நன்றி என்று கூறி இருக்கிறார்.