இது ஒதுக்கப்பட்ட படமா ஆகிடக் கூடாது- கொட்டுக்காளி படம் குறித்து சூரி எமோஷனல்

By Rajkumar · 21/8/2024

கொட்டுக்காளி படம் குறித்து நடிகர் சூரி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விஷயங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார் சூரி. கடைசியாக இவர் நடித்த 'கருடன்' படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனையும் செய்திருந்தது. தற்போது சூரி நடித்து இருக்கும் படம் 'கொட்டுக்காளி'.

இப்படத்தை இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே 'கூலாங்கல்' என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் சூரி, அன்னா பென் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பிரத்யோகக் காட்சி பத்திரிக்கையாளர்களுக்கு திரையிடப்பட்டது.

பி.எஸ்.வினோத்ராஜ் பேசியது:

அப்போது பத்திரிக்கையாளர்களிடம் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ், என்னுடைய 'கூழாங்கல்' திரைப்படத்தைப் போலவே 'கொட்டுக்காளி' திரைப்படத்திற்கும் நீங்கள் நல்ல வரவேற்பை தருவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் ஒரு காட்சி வரும். அதில் அம்மா ஒருவர், ஒரு நம்பிக்கையாக, துணையாக இருக்கும் என்று ஒரு கை மண்ணை அள்ளி முந்தானையில் முடித்துக் கொள்வார்.அது நம்மை காப்பாற்றும் என்று நினைத்துக் கொள்வார்.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

சூரி பேசியது:

அதுபோல, நாங்கள் இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று இயற்கையை நம்புகிறோம், மக்களாகிய உங்களையும் நம்புகிறோம் என்று கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் சூரி,' உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறது. மேலும், விருதுகள் கூட கிடைத்திருக்கின்றன. அதேபோல் நம்ம ஊரிலும் கொட்டுக்காளி படத்திற்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

இந்த படத்தை ஒதிக்கிடாதீங்க:

மேலும், இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில், வேற மாதிரி கூட இயக்குனர் நினைத்து இருந்தால் பண்ணி இருக்கலாம். ஆனால், மக்களுக்கு நெருக்கமான திரைப்படமாக எளிமையாக இருக்க வேண்டும் என்று இப்படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார். அதே மாதிரி, அவார்ட் வாங்கின படம் என்றால் பார்க்க கூடாதுன்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. இது ஒதுக்கப்பட்ட படமாக ஆகக்கூடாது. கொட்டுக்காளி போன்ற நல்ல திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற வேண்டும்.

கொட்டுக்காளி வென்ற விருது :

அதற்கு ரசிகர்களாகிய நீங்கள் தான் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு தரவேண்டும் என்று கூறி இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த 53வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை கொட்டுக்காளி திரைப்படம் வென்றது நாம் அறிந்ததே. அந்த நிகழ்ச்சியில் கொட்டுக்களி பட இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் மற்றும் நடிகை அனா பென் கலந்து கலந்து கொண்டனர். அதேபோல், ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடப்பட்டது.

behindtalkies AMP · Quick view
View full