முதல் சீனே கடவுளே அஜித்தே தான், அந்தச் சிறுவன் இவர் தான் - மாமன் பட விழாவில் நடிகர் சூரி பகிர்ந்த தகவல்
மாமன் பட விழாவில் நடிகர் சூரி கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார் சூரி. இவர் சீரியலில் தான் நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தன்னுடைய விடாமுயற்சினால் தற்போது ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். இவர் முதன் முதலாக தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ என்ற படத்தின் மூலம் தான் ஹீரோ ஆனார். முதல் படமே சூரிக்கு மிக பெரிய பெயரை வாங்கி தந்தது. இதை அடுத்து இவர் கருடன், கொட்டுக்காளி போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். இந்த படங்களும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.
சூரி திரைப்பயணம்:
அதன் பின் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘விடுதலை 2’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமன். இந்த படம் மே ஒன்பதாம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. தாய் மாமனின் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சூரி, இந்த படத்தினுடைய கதையை கேட்ட உடனே நான் வெற்றிமாறன் அண்ணனிடம் சொன்னேன்.
https://www.youtube.com/watch?v=GqGZzrEiRSs
மாமன் பட விழாவில் சூரி:
அவர் சில விஷயங்களை சேர்க்க சொன்னார். அதை இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜனிடமும் சொன்னேன். நானும் பல விஷயங்களை சொன்னேன். இது எல்லா குடும்பங்களிலும் நடக்கும் கதை. என்னோட குடும்பத்திலும் அப்படித்தான் இருக்கிறது. இந்த படத்தில் அந்த சிறுவன் கதாபாத்திரம் தான் முக்கியமான கதாபாத்திரமே. பல மதங்களாக அந்த சிறுவன் கதாபாத்திரத்திற்கு யார் சரியான ஆள் என்று தேடி அலைந்தோம். நானும் பல போட்டோக்களை அனுப்பினேன். பார்த்துக்கலாம் என்று இயக்குனர் சொல்லிக் கொண்டே இருந்தார்.
சிறுவன் ரோல்:
படத்தின் முதல் காட்சி எடுத்த போது கடவுளே என்று சொன்னவுடன் யாரோ ஒருவர் அஜித்தே என்று சொன்னார். மீண்டும் மீண்டும் அந்த குரல் கேட்டது. அப்போதுதான் அது அந்த சிறுவன் என்று நான் கண்டுபிடித்தேன். அந்தப் பையனிடம் இயக்குனர் எங்கே? என்று கேட்டேன். அதற்கு அவன், அப்பா இங்கதான் இருக்கிறார் என்று சொன்னார். அதற்கு பிறகு தான் இயக்குனர் மகன் தான் அந்த சிறுவன் என்று எங்களுக்கு தெரிந்தது. முன்னாடியே தன் மகனை அந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்துவிட்டு எங்களை எல்லாம் அந்த கதாபாத்திற்கு சரியான ஆளை தேட வைத்து கொண்டிருந்தார்.
https://www.youtube.com/watch?v=4AW5VtVHS8o
படம் பற்றி சொன்னது:
அந்த பையன், தன் அப்பா எந்த பெண்ணிடம் பேசுகிறார் என்று கண்காணித்துக் கொண்டே இருப்பார். நடிகை சுவாசிகாவை ஒரு சீனில் இயக்குனர் கட்டி பிடித்து காட்டினார். அதை அந்த சிறுவன் தன்னுடைய அம்மாவிடம் சொல்லி பயங்கர கலவரத்தை செய்தான். தாய்மாமன் எல்லோருடைய குடும்பத்திலும் இருக்கும் கதை. இந்த படம் மூலம் எங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒருவர் மாறுவார் என நினைக்கிறேன். இந்த படம் மூலம் அது நடந்தால் அது யார் என்று சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.