தனம் சீரியலில் நடிக்க காரணம், சஞ்சீவ் உடனான ப்ரச்சனை- மனம் திறந்து நடிகை ஸ்ரீகுமார் சொன்ன தகவல்

By subhashini · 5/3/2025

சஞ்சீவ் உடனான சண்டை குறித்து நடிகர் ஸ்ரீகுமார் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகுமார். இவர் பிரபல இசை இயக்குனர் சங்கர் கணேஷின் மகனாவார். இவர் 2001 ஆம் ஆண்டு தான் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை காவியாஞ்சலி என்ற தொடரின் மூலம் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இவர் கண்மணி, அகல்யா, ஆனந்தம், மலர்கள், மேகலா, சிவசக்தி, உறவுகள், கனா காணும் காலங்கள், தலையணை பூக்கள், யாரடி நீ மோகினி போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் பம்பரக்கண்ணாலே, சரோஜா தேவி, ரங்கூன், ஆர்கேநகர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். பின் சினிமாவில் இவருக்கு வரவேற்பு குறைந்தவுடன் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். மேலும், ஸ்ரீ குமார் சீரியல் மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றிருக்கிறார். இதனிடையே இவர் 2009ம் ஆண்டு ஷமிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ஸ்ரீகுமார் குறித்த தகவல்:

‘தோழா தோழா தோல் கொடு’ என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் ஷமிதா. பாண்டவர் பூமி படத்தின் மூலம் தான் இவர் மத்தியில் பிரபலமானவர். அதற்கு பிறகு இவருக்கு சரியான சினிமா வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரையை நோக்கி பயணம் செய்தார். இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தனம் என்ற சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இன்னும் சில எபிசோடுகள் மட்டும் தான் அவர் வருவார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஸ்ரீகுமார், வானத்தைப்போல சீரியல் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றது.

ஸ்ரீகுமார் பேட்டி:

அது முடிந்ததும் வேறு சீரியலில் எதுவும் கமிட்டாகாமல் இருந்தேன். இடையில் அமரன் உட்பட சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துக் கொண்டிருந்தேன். எந்த வாய்ப்பு வந்தாலும் விடாமல் நடியுங்கள் என்று என் மனைவி சொல்லி இருக்கிறார். அதனால் தான் நானும் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். தனம் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க தான் கேட்டார்கள். எதற்கு அந்த மாதிரி நடிகனும் என்று எனக்கும் முதலில் தோன்றியது. அதற்கு பின் கதை சொன்னார்கள். கதையில் என்னுடைய கதாபாத்திரம் உடல் உறுப்பு தானம் செய்கிற மாதிரி கான்செப்ட். அதனால்தான் நான் ஒத்துக் கொண்டேன்.

https://www.youtube.com/watch?v=US5gUm0bj44

சீரியல் பற்றி சொன்னது:

அதோடு 20 வருஷத்துக்கு முன்னாடியே என்னுடைய உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் எழுதிக் கொடுத்தேன். அதனால்தான் சீரியலில் சரி என்று சம்மதித்தேன். அதேபோல் சோசியல் மீடியாவில் எனக்கும் சஞ்சீவிக்கும் இடையே சச்சரவு என்று சொல்லி இருக்கிறார்கள். சஞ்சீவும் நானும் இன்று நேற்று நண்பர்கள் இல்லை. டிவிக்கு நான் வந்த நாளிலிருந்து எங்களுடைய நட்பு தொடங்கியது. அவனும் விஜய் சாரும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள். ஆனால், இன்னைக்கு விஜய் சார் இருக்கிற இடம் வேற. அதனால் இப்ப பழைய விஷயங்களை பற்றி பொதுவெளியில் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசணும். இல்லையென்றால், ட்ரோல் மெட்டீரியல் ஆகிவிடும்.

சஞ்சீவ் உடனான சண்டை:

நானும் நடிகர் சூர்யா சாரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பின் வரிசையில் நின்று டான்ஸ் எல்லாம் ஆடினவர்கள் தான். ஆனால், இன்னைக்கு அப்போ நடந்ததை எல்லாம் ஓபன் ஆக பேசுவதாக சொல்லி எல்லாத்தையும் பேசினால் அதை யாராவது ரசிப்பார்களா? என்று நான் அவனிடம் கேட்டேன். அதனால் அவனுக்கு கொஞ்சம் கோபம் வந்தது. பின் நாணுமே அதை நேரடியாக அவனிடம் சொல்லி இருக்கலாம். பொதுவெளியில் சொல்லியிருக்கக்கூடாது என்று நான் அவனிடம் மன்னிப்பு கேட்டேன். அவனுமே அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறி இருக்கிறார். வானத்தைப்போல சீரியலில் சஞ்சீவ் போலீஸ் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full