பெரிய இயக்குனர் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல - பட விழாவில் மனம் திறந்து ஸ்ரீகாந்த் சொன்ன விஷயம்
தமிழ் சினிமாவின் நிலை குறித்து செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஸ்ரீகாந்த் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் கே. பாலச்சந்தர் இயக்கிய ‘ஜன்னல் மரபு கவிதைகள்’ என்ற சீரியலின் மூலம் தான் நடிகராக அறிமுகம் ஆகியிருந்தார். அதற்குப் பின் தான் இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். கடந்த 2002 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா கூட்டம்’ என்ற படத்தின் மூலம் தான் இவர் நடிகர் ஆனார்.
இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் பல பெண் ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாய் பட்டத்தை பெற்றார். அதைத்தொடர்ந்து இவர் ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் கலந்துகொண்ட ஸ்ரீகாந்த், நான் சினிமாத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் கடந்து விட்டது. என்னுடைய இந்த பயணத்தில் என்னை வாழ்த்தியும், விமர்சித்தும், திட்டியும், ஆதரவு தந்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். நான் பார்த்து வியந்த மிகப்பெரிய இயக்குனர் ஒருவர் படத்தில் நடித்தேன்.
ஸ்ரீகாந்த் திரைப்பயணம்:
இருந்தாலும், இவருக்கு சமீப காலமாக சரியான படங்கள் அமைவதில்லை. இவரால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறார். கடைசியாக நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘தினசரி’. இப்படத்திற்கு ஹீரோயின் ஆக தயாரிப்பாளர் சிந்திய லூர்ட்தே நடித்தார். ஜி.சங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.
தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல். இந்த படத்தை இயக்குனர் கே.ரங்கராஜ் என்பவர் இயக்கி இருக்கிறார்.
ஸ்ரீகாந்த் நடிக்கும் படம்:
இவர் ஏற்கனவே உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம், உயிரே உனக்காக, கீதாஞ்சலி போன்ற படங்களை எல்லாம் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படம் மார்ச் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று இருந்தது. இதில் கலந்துகொண்ட ஸ்ரீகாந்த், நான் சினிமாத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் கடந்து விட்டது. என்னுடைய இந்த பயணத்தில் என்னை வாழ்த்தியும், விமர்சித்தும், திட்டியும், ஆதரவு தந்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். நான் பார்த்து வியந்த மிகப்பெரிய இயக்குனர் ஒருவர் படத்தில் நடித்தேன்.
ஸ்ரீகாந்த் பேட்டி:
அந்த படத்தோட சூட் வெளிநாட்டில் நடந்தது. ஒரு நாள் லொகேஷனுக்கு வாடகை மட்டுமே 10 லட்சம் ரூபாய். காலையில் எட்டு மணிக்கு ஷூட்டிங் என்று சொன்னார்கள். நான் காலையில் 7.45க்கு எல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விட்டேன். ஆனால், அந்த இயக்குனர் மாலை 3.30 மணிக்கு தான் வந்தார். ஆனால், இந்த படத்தோட இயக்குனர் ரங்கராஜ் சார் ஏழு மணிக்கு ஷூட்டிங் என்றால் 6:30 மணிக்கு வந்துவிடுவார். அந்த அளவிற்கு அர்ப்பணி போட வேலை பார்ப்பார். எனக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. கடைசி வரை சினிமாவில் தான் இருப்பேன். பார்வையாளர்கள் நான் நல்ல படம் பண்ணால் என்னை தூக்கி விட ரெடியாகி இருக்கிறார்கள். நிச்சயம் நான் நல்ல படம் பண்ணுவேன்.
https://www.youtube.com/watch?v=kL7ApaAHXzg
தமிழ் சினிமா பற்றி சொன்னது:
கடைசிவரை ஓடிக்கொண்டே தான் இருப்பேன். இப்போது பிடிக்கவில்லை என்றால் நடிகர் தைரியமாக சொல்லலாம். ஆனால் முன்னாடி எல்லாம் அப்படி கிடையாது. மேலும், ஒரு காலத்தில் சென்னையில் தான் அதிகமான இருக்கும். எல்லோரும் இங்கு வந்து தான் சினிமா கற்றுக்கொள்வார்கள். ஆனால், இப்போது ஹைதராபாத்தில் அதிகமான சினிமா ஸ்டுடியோகள் இருக்கிறது. அதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. நம்மிடம் ஒற்றுமை இல்லை. சினிமா சங்கங்கள் இரண்டு கட்சியாக பிரிந்து இருக்கிறார்கள். அது வேண்டாம், ஒற்றுமையாக இருந்து மீண்டும் நம் சினிமாவை வளர்க்கணும். சென்னையை உயர்த்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்.