ஹீரோ சப்போர்ட், ஜீரோ கெமிஸ்ட்ரி - குஷ்பூ உடனான காதல் பற்றி மனம் திறந்த இயக்குனர் சுந்தர்.சி
குஷ்பூ பற்றி இயக்குனர் சுந்தர்.சி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக சுந்தர்.சி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். பெரும்பாலும் இவர் இயக்கிய படங்களில் இவர் நடித்தும் வருகிறார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு சுந்தர்.சி இயக்கி, நடித்த அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இதை தொடர்ந்து இந்த வருடம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் மதகஜராஜா படம் வெளியாகி இருந்தது. 12 ஆண்டுகள் கழித்து வெளியாகி இருந்த இந்த படமும் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.
கேங்கர்ஸ் படம்:
இதை அடுத்து தற்போது சுந்தர்.சி- வடிவேலு கூட்டணியில் வெளியாகி இருக்கும் படம் கேங்கர்ஸ். இதற்கு முன்பு சுந்தர்.சி-வடிவேலு கூட்டணியில் வின்னர், தலைநகரம் போன்ற படங்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி- வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனிஷ்காந்த், பக்ஸ் பகவதி பெருமாள், மைம் கோபி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சத்யா இசையமைத்திருக்கிறார்.
சுந்தர்.சி பேட்டி:
வெங்கட் ராகவன் இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இருக்கிறார். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் குஷ்பு பற்றி சுந்தர்சி கூறியது, குஷ்பூ எனக்கு எப்போதுமே ஜீரோ சப்போர்ட் தான். ஜீரோ அவங்க என்னோட வேலை எதிலும் தலையிட மாட்டார். அவர்களுக்கு பொருத்தவரைக்கும் என் மேல் நம்பிக்கை இருக்கு. நான் நன்றாக பண்ணுவேன் என்று அவர் நினைக்கிறார்.
https://www.youtube.com/watch?v=x7UNL0oebgA
குஷ்பூ பற்றி சொன்னது:
இதை நான் நிறைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறேன். அவங்க படம் பண்ணி முடித்துவிட்டு பைனல் அவுட்புட் வரும்போது அதைப் பார்க்க ஆவலாக இருப்பார்கள். ரசிகர்களோடு உட்கார்ந்து நாம் படம் பார்ப்போம் இல்லையா, அப்படி தான் அவங்க படம் பார்க்க வருவார்கள். மத்தபடி படத்தில் இருக்கிற சீன், பாட்டு பற்றி எதையுமே அவங்க கேட்டுக்க மாட்டாங்க. அது மட்டும் இல்லாமல் நான் இதைப் பற்றியெல்லாம் டிஸ்கஸ் பண்ணிக்கவும் மாட்டேன்.
குஷ்பூ உடன் கெமிஸ்ட்ரி:
சில சமயம் நமக்கு சின்ன இதுவா, அதுவா என்று ஒரு கன்ஃபியூஷன் வரும். அந்த சமயத்தில் மட்டும் ஒரு அவரிடம் ஐடியா கேட்பேன். அந்த சமயத்தில் அவங்களோட சாய்ஸ் என்னவென்று சொல்வார்கள். இதையெல்லாம் தாண்டி அவங்க எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து என்னை விட்டு ஒதுங்கி நிற்கிறதது எனக்கு கொடுக்கிற பெரிய சப்போர்ட். மேலும், குஷ்பூ லொகேஷனுக்கு வர மாட்டார்கள். அப்படியே வந்தாலும் என் கூட எல்லாம் பேச மாட்டாங்க. நாங்க ஜீரோ கெமிஸ்ட்ரின்னு சொல்லுவாங்க. ஏன்னா நாங்க ரெண்டு பேரும் பேசி கூட யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று வேடிக்கையாக பேசி இருக்கிறார்.