கைதியால் வந்த வினை. தனிமைபடுத்திக்கொள்ளும்படி நடிகருக்கு அதிரடி உத்தரவு. எப்படினு பாருங்க.

By Rajkumar · 26/5/2020

ஒட்டுமொத்த உலகமே கொரோனாவினால் ஸ்தம்பித்துப் போயுள்ளது. கொரோனாவின் பரவல் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவினால் மக்களின் இயல்பு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்த கைதி ஒருவரால் பிரபல மலையாள நடிகருக்கு கொரோனா தொற்று இருக்குமோ? என்று அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி உத்தரவிட்டுள்ளார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

திருவனந்தபுரத்தை அடுத்த வெஞ்ஞாரமூட்டில் இருக்கும் கள்ளச்சாராயம் காய்ச்ச வழக்கில் ஒரு வாலிபரை இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் பிடித்து கைது செய்தனர். ஆனால், அந்த குற்றவாளிக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த கைதியுடன் இருந்த இன்ஸ்பெக்டர், போலீசார் உள்பட 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மேலும், இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் ஒருவர் சமீபத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் மலையாள நடிகர் சுராஜ், எம்.எல்.ஏ. முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நடிகர் சுராஜ், எம்.எல்.ஏ முரளி உட்பட சில பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நடிகர் சுராஜ் அவர்கள் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகர் ஆவார். இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். இவர் தேசிய விருது உட்பட பல விருதுகளையும் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல் மலையாள திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

behindtalkies AMP · Quick view
View full