நந்தாவுக்கு பிறகு தான் கௌதம், சஞ்சய் ராமசாமி வந்தாரு - 'பாலா 25' விழாவில் சூர்யா சொன்ன விஷயம்

By subhashini · 19/12/2024

'பாலா 25' விழாவில் நடிகர் சூர்யா கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அதுமட்டுமில்லாமல் பாலா சினிமா உலகில் இயக்குனர் ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். தற்போது இவர் வணங்கான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி, இயக்குனர் பாலாவும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான பணிகள் எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

பாலா 25 நிகழ்ச்சி:

இந்நிலையில் பாலாவினுடைய திரைப்பயணம் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி 'பாலா 25' விழா நடைபெற்று சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் சிவக்குமார், சூர்யா, விக்ரமன், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த விழாவில் நடிகர் சிவகுமார், இயக்குனர் பாலாவுக்கு தங்க சையின் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார். இதை அடுத்து விழாவில் நடிகர் சூர்யா, 2000ல் நெய்க்காரன்பட்டியில் நடந்த சூட்டிங் போது ஒரு போன் கால் வந்தது. அந்த போன் காலுக்கு பிறகு தான் என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது.

விழாவில் சூர்யா:

சேது படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நடிகர் நடிக்க முடியுமா? இயக்குனர் இயக்க முடியுமா? 100 நாள் எனக்குள் சேது படத்தோட தாக்கம் இருந்தது. அடுத்த படத்தை உன்னை வைத்து பண்ணுறேன் என்று பாலா சார் சொன்ன வார்த்தை எல்லாத்தையுமே மாத்தி இருந்தது. பிதாமகன் ஷூட்டிங்கில் பாலா சாரிடம் ஒவ்வொரு நாளும் பல விஷயங்களை கவனித்தேன். அப்போ எனக்கு ஒரு போன் வரவில்லை என்றால் இந்த வாழ்க்கை எனக்கு கிடையாது.

பாலா பட வாய்ப்பு:

நந்தா பார்த்துவிட்டு தான் கௌதம் அவர்கள் காக்க காக்க படத்துக்கு கூப்பிட்டார். அதன் பிறகு தான் சஞ்சய் ராமசாமி வந்தார். இதுக்கெல்லாம் காரணம் பாலா அண்ணன் தான். வணங்கான் மிக முக்கியமான படம். உறவுகளுக்கு அண்ணன் மதிப்பு கொடுப்பார். அவங்களோட அறம், கோபம்னு பல விஷயங்களை அண்ணன் படத்தில் பார்க்கலாம். அண்ணன் என்பது ஒரு வார்த்தை இல்லை, ஒரு உறவு. நிரந்தரமான இந்த அண்ணன்- தம்பி உறவை கொடுத்த அண்ணனுக்கு நன்றி. என்னுடைய பேரன்பும் மரியாதையும் இந்த வாழ்க்கை கொடுத்ததற்கு அண்ணாவுக்கு நன்றி என்று கூறி இருக்கிறார்.

பாலா குறித்து சொன்னது:

மேலும், பாலாவின் வணங்கான் படத்தில் முதலில் சூர்யா தான் கமிட் ஆகி இருந்தார். பின் படத்தினுடைய படப்பிடிப்புமே நடந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், ஏதோ சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார். அது குறித்து இருவருமே வெளியிடவில்லை. ஆனால், இருவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று ரெண்டு பேருமே அறிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் தான் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த கங்குவா படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை அடுத்து சூர்யா சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full