இந்த மாதிரி வெற்றி கிடைச்சு ரொம்ப நாள் ஆச்சு - கருப்பு பட சக்ஸஸ் மீட்டில் பேசிய நடிகர் சூர்யா
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. இந்த படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், திரிஷா, சுவாசிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். பல பிரச்சினைகளைத் தாண்டி கருப்பு படம் வெளியாகி இருக்கிறது.
படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்களில் கருப்பு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதோடு படத்தினுடைய கிளைமேக்ஸ் காட்சியில் வரும் போது சிலர் தியேட்டரில் சாமி ஆடும் வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு இது சூர்யா உடைய மிகப்பெரிய கம்பேக் படமாக இருக்கிறது. இந்த படம் சூர்யா உடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தே என்று சொல்லலாம்.
கருப்பு படம்:
கருப்பு படம் மிகப்பெரிய அளவில் வசூலை குவித்து வருகிறது. இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து படத்தின் ஹீரோ சூர்யா, ஆர்ஜே பாலாஜி, தயாரிப்பாளர் என பலருமே நன்றி தெரிவித்து இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கருப்பு படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றிருக்கிறது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, கருப்பு படத்தினுடைய கதையை பாலாஜி சொன்னார்.
சக்ஸஸ் மீட்:
அந்த முடிவை நான் 30 லிருந்து 45 நிமிடத்திற்குள் எடுத்துவிட்டேன். சமீப காலமாகவே நான் இவ்வளவு சீக்கிரமாக எந்த ஒரு படத்தையும் தேர்வு செய்ததே கிடையாது. அன்றைக்கு எல்லாமே சரியாக இருந்த மாதிரி இருந்தது. இது முழுக்க முழுக்க ஆர் ஜே பாலாஜி உடைய விஷன் தான். அவர் சொல்லும் போதே தியேட்டரில் வேற மாதிரி இருக்கும் என்று நம்பிக்கை எனக்கு இருந்தது. நம்பிக்கை வைத்து தான் எல்லா படங்களையும் பன்றோம். படம் குறித்த முடிவு பண்ண முதல் நாளில் இருந்து எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. அதற்கு முழு காரணம் ட்ரீம் வாரியர்ஸ் பிரகாஷ், பிரபு.
https://www.youtube.com/watch?v=lE9M0uYjdj0
சூர்யா சொன்னது:
எல்லா முடிவுகளையும் சரியாக எடுத்ததுக்கும் சரியாக எடுக்க வைத்த கருப்பசாமிக்கும் தான் நன்றி சொல்லணும். இந்த படம் எடுக்க ஆசைப்பட்டது தான். ஆனால், எதிர்பார்க்காத பெரிய வெற்றி கொடுத்த உங்கள் எல்லோருக்குமே நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அதே போல் சமீபத்தில் என்னுடைய படத்திற்கு இத்தகைய வரவேற்பு கிடைத்ததை நான் பார்த்ததே இல்லை. உலகம் முழுவதும் இந்த கருப்பு படத்திற்காக நிறைய வரவேற்பு கிடைத்து வருகிறது. ரொம்பவே நன்றி என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.