என் வாழ்க்கையோட பர்பஸ் இது தான் - ரெட்ரோ பட விழாவில் நடிகர் சூர்யா சொன்ன விஷயம்
ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல பவரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.
இந்த படத்தை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்தார். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து தற்போது நடிகர் சூர்யா அவர்கள் ரெட்ரோ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2D மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது.
சூர்யா திரைப்பயணம்:
இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், பிரகாஷ் ராஜ், நந்திதா தாஸ் உட்பட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் அடுத்த ஆண்டு மே 1 கோடை விடுமுறையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான கனிமா பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ரெட்ரோ படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது.
ரெட்ரோ படம்:
இதில் பட குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய சூர்யா, என்னுடைய ரசிகர்களுக்கு இங்கு வந்திருக்கும் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் நான் சொல்லிக் கொள்ளும் விஷயம் ஒன்னே ஒன்றுதான். எங்க அப்பா சொன்னதை தான் நானும் சொல்கிறேன். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எல்லா சப்ஜெக்டிலும் பெயில் ஆகிவிட்டேன். ஒரே முறை தான் பாஸ் பண்ணேன். அதுதான் பப்ளிக். 12வது படிக்கும்போது அதேதான் நடந்தது. அதற்குப் பிறகும் வாழ்க்கை ரொம்ப அழகாக மாறிவிட்டது. வாழ்க்கையில் உங்களுக்கான வாய்ப்பு வரும். அந்த சமயத்தில் நல்ல கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். அதை விட்டு விடாதீர்கள்.
விழாவில் ரெட்ரோ:
எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு முறை இரண்டு முறை மூன்று முறை தான் வாய்ப்பு வரும். அது எந்த காரணத்துக்காகவும் தவறவிடக்கூடாது. கார்த்திக் சுப்புராஜ் கூட ஐடியில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்படியே அங்கிருந்து சினிமாவுக்கு ஜம்ப் பண்ணி விட்டார். இப்போ அவருக்கு வேற ஒரு துறை அமைந்துவிட்டது. எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு இருக்கும். அதுக்கான சின்ன ரிஸ்க் எடுக்கலாம். அந்த ரிஸ்க் எடுக்க ஆர்வம் இருந்தால் மட்டும் பத்தாது. அதுக்காக உழைக்கவும் செய்தால் எல்லாமே கிடைக்கும். எல்லோருக்குமே அழகான வாழ்க்கை இருக்கிறது. உன் வாழ்க்கைக்கான பர்பஸ் என்ன என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டு ஒரு பதிலையும் தெரிந்து கொண்டேன். அது நீங்கள் எல்லோரும் குறிப்பிட்ட மாதிரி அகரம் பவுண்டேஷன் தான்.
https://www.youtube.com/watch?v=g2tGvAVo7s4
சூர்யா சொன்ன அறிவுரை:
நான் நடிகராக இருப்பதை விட அகரம் பவுண்டேஷனுக்கு பல பேருக்கு கொண்டு போய் சேர்த்தது தான் நான் செஞ்ச விஷயம். இதை நான் தனியாளாக செய்யவில்லை. நீங்கள் கொடுத்த சக்தியால்தான் பண்ண முடிந்தது. நான் சொன்ன மாதிரி நான் பத்தாவது ஃபெயில், 12வது பெயில், காலேஜில் ரொம்ப கம்மியாக படிக்கிற ஒரு ஆளு. இருந்தாலும் எனக்கு ஒரு வாழ்க்கை கொடுத்தது நீங்கள் தான். நீங்கள் கொடுத்த சக்தியால்தான் இப்போது 7000 முதல் 8000 தம்பி தங்கைகளுக்கு படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். பட்டதாரிகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறேன். இன்னும் நிறைய பேர் ஆவார்கள். அதுக்காக அகரமில் இணைந்திருக்கும் அத்தனை பேருக்குமே நன்றி. நம்மோட வாழ்க்கை அதற்கான அர்த்தம் இன்னும் பல விஷயங்கள் பத்தி பேசுற படம் தான் ரெட்ரோ. இந்த படத்தில் காதல் சண்டை யுத்தம்ன்னு பல விஷயம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.