இந்த காசுக்கு ஹாஸ்பிடல் கட்டி இருக்கலாமே? சூர்யாவை விளாசி தள்ளும் நெட்டிசன்கள்

By ·

நடிகர் சூர்யா பிரம்மாண்டமாக தனி விமானம் ஒன்று வாங்கியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன், பிரபல நடிகர் கார்த்தியின் அண்ணன் ஆவார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் நடிகர் சூர்யா தனி விமானம் வாங்கி இருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரலாக்கப்ட்டு வருகிறது.

நடிகர் சூர்யா பிரம்மாண்டமாக தனி விமானம்(praivate jet) ஒன்றை வாங்கியிருக்கிறார். இவர் வாங்கி இருக்கும் பிரைவேட் செட்டின் பெயர் Dassault falcon 2000. இதில் பல சொகுசு வசதிகள் இருக்கிறது. இதனுடைய மதிப்பு மட்டும் 120 கோடி என்று கூறப்படுகிறது. ஆனால், இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் சூர்யாவை விமர்சித்து வருகிறார்கள்.

சூர்யா தனி விமானம்:

ஏற்கனவே, சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா விருது வழங்கும் விழா ஒன்றில், கோவில் கட்ட கொடுக்கும் பணத்தில் பாதி ஹாஸ்பிடல், பள்ளிகளுக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும். நிறைய மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் பாழடைந்து இருக்கிறது. உதவி செய்யுங்கள் என்றெல்லாம் பேசியிருந்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. சிலர் ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் சிலர் எதிர்மறையாக விமர்சித்து இருந்தார்கள்.

ஜோதிகா சொன்னது:

மேலும், தற்போது சூர்யா அவர்கள் தனி விமானம் ஒன்றை பலகோடி கணக்கில் செலவு செய்து வாங்கியதற்கு, இந்த பணத்தை வைத்து நீங்கள் பள்ளிக்கூடம், ஹாஸ்பிடலுக்கு உதவி செய்திருக்கலாமே, ஒரு தனி ஹாஸ்பிடல் கட்டி இருக்கலாமே, எதற்கு தேவையில்லாமல் சொகுசு விமானம் வாங்கினீர்கள். வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் இங்கே இருக்கும் பிள்ளைகளுக்கு உதவும் நோக்கத்தில் அகரம் பவுண்டேஷனுக்கு பணத்தை அனுப்புகிறார்கள். ஆனால், இந்த சூர்யா சொந்தமாக ஜெட் வாங்கிட்டு சந்தோஷமாக இருக்கிறார்.

நெட்டிசன்கள் விமர்சனம் :

ஊருக்கு நல்லது செய்கிறேன் என்று சொல்கிறார்கள். ஊருக்கு தான் உபதேசம் என்றெல்லாம் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். இதற்கு சூர்யா தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும், இந்த மாதிரியான தனி விமானத்தை தென்னிந்திய சினிமாவில் உள்ள சிரஞ்சீவி, ராம்சரண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் போன்ற பல பிரபலங்கள் வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நடிகை நயன்தாராவும் தனி விமானம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கங்குவா படம்:

தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கங்குவா’ படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படம் வருகிற அக்டோபர் 10-ம் தேதி திரையரங்கில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை