சூர்யாவின் ரெட்ரோ படத்தின் தலைப்புக்கு இதுதான் அர்த்தம் - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன விஷயம்

By subhashini · 12/4/2025

சூர்யாவின் ரெட்ரோ படத்தின் தலைப்பின் அர்த்தம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.

இந்த படத்தை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்தார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து தற்போது நடிகர் சூர்யா அவர்கள் தன்னுடைய 44வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இயக்குகிறார்.

சூர்யா திரைப்பயணம்:

இந்த படத்தை சூர்யாவின் 2D மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

ரெட்ரோ படம்:

இவர்களுடன் இந்த படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், பிரகாஷ் ராஜ், நந்திதா தாஸ் உட்பட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த படம் அடுத்த ஆண்டு மே 1 கோடை விடுமுறையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சூர்யா நடிக்கும் இந்த படத்திற்கு ரெட்ரோ என்ற பெயரிடப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான கனிமா பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் பேட்டி:

இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ரெட்ரோ படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருக்கும் சில விஷயங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், படத்தின் தலைப்பு ரெட்ரோ பெயருக்கான அர்த்தம் ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல். இதற்கு திரும்பி பார்ப்பது என்று வேறு அர்த்தமும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

சூர்யா 45 படம்:

மேலும், இதை அடுத்து சூர்யா அவர்கள் வெற்றிமாறனின் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதை அடுத்து தற்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதற்கு முன்பு மௌனம் பேசியதே, ஆறு போன்ற படங்களில் சூர்யா-த்ரிஷா இருவரும் சேர்ந்து நடித்திருந்தார்கள். நீண்ட இடைவெளிக்கு பின் இருவரும் மீண்டும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full