விஜய் லியோ ஆடியோ லாஞ்சில் பேசியதை அகரம் விழாவில் பேசிய சூர்யா- என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?
சிவகுமார் அறக்கட்டளையின் விழாவில் நடிகர் சூர்யா பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் சிவகுமார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் சினிமா வாய்ப்புகள் குறையை தொடங்கியவுடன் இவர் துணை வேடங்களில் நடித்து வந்தார். அதற்குப் பின் இவர் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார்.
மேலும், இவருடைய மகன்கள் தான் சூர்யா, கார்த்தி. தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருவருமே திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தன் தந்தையை போலவே இவர்களும் மக்கள் மத்தியில் தங்களுக்கான ஒரு இடத்தை பிடித்து வைத்து இருக்கிறார்கள். மேலும், சிவகுமார் குடும்பம் நடிப்பை தாண்டி சமூக சேவையும் செய்து வருகிறது. அந்த வகையில் சிவகுமார் அவர்கள் தன்னுடைய பெயரில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையை 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார்.
ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை விழா:
இதில் அவர் ஆதரவற்ற மற்றும் ஏழ்மையாக இருக்கும் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். அதற்கு பிறகு நடிகர் சூர்யா- கார்த்தி இருவரும் இணைந்து அகரம் அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்து வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது சிவகுமாரின் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையுடன் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையும் இணைந்து பல உதவிகளை செய்து கொண்டிருக்கின்றது.
விழாவில் சூர்யா சொன்னது:
இந்த நிலையில் இந்த அறக்கட்டளையின் 45 ஆவது ஆண்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி உட்பட பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த விழாவில் சிவகுமார் குடும்பம் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி இருந்தார்கள். பின் விழாவில் நடிகர் சூர்யா, 80 காலகட்டத்தில் இருந்து இந்த மாதிரியான விருது விழாக்களை அப்பா செய்து கொண்டிருந்தார்.
சூர்யா சொன்ன அறிவுரை:
பின் அகரம் அறக்கட்டளை தொடங்கி 25 வருடம் ஆகப்போகிறது. இதில் ரொம்பவே முக்கியமான நிகழ்வு விதை தான். 18 வயதிலேயே மாணவர்கள் எல்லாம் எதிர்நீச்சல் போட்டு வந்திருக்கிறார்கள். எங்களை விட இந்த சாதனை எல்லாம் மிகப் பெரியது. கிட்டத்தட்ட 350 கல்லூரிகள் எங்களுக்கு உதவி பண்ணியிருக்கிறார்கள். அகர அறக்கட்டளையின் உடைய முன்னாள் மாணவர்களும் இப்போது அறக்கட்டளையை வழிநடத்திக் கொண்டு போகிறார்கள்.
— RamKumarr (@ramk8060) July 25, 2024
நெட்டிசன்கள் ட்ரோல்:
மேலும், நீங்கள் என்னவாக வேண்டும் என நினைக்கிறீர்களோ அதுவாக மாறுங்கள். பெரிதாக கனவு காணுங்கள். கண்டிப்பாக உங்கள் கனவு நடக்கும். 'small aim is crime , so always greater aim'. அதனால் உங்களுடைய எண்ணங்கள் தான் நிஜமாக மாறும் என்று பேசியிருக்கிறார். இப்படி இவர் பேசியது தான் தற்போது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. காரணம், விஜய் அவர்கள் தன்னுடைய லியோ படத்தின் ஆடியோ விழாவில் இதைத்தான் சொல்லியிருப்பார். இதை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.