'இன்னும் பெருமையாக இருக்கிறது அப்பா' - தந்தை சிவகுமார் செய்துள்ள சாதனை குறித்து சூர்யாவின் பதிவு
தனது தந்தை நடிகர் சிவகுமார் குறித்து சூர்யா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் சிவகுமார். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். 1965 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் என்று கொடுத்தார். அதைத் தொடர்ந்து இவர் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், முத்துராமன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
மேலும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி போன்ற படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். சிவகுமார் என்று சொன்னாலே அவரது ஒழுகத்திற்கு தான் பெயர் போனவர். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜயத்திலும் எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாதவர். அதனால் தான் சூர்யா கூட பல ஆண்டுகள் சினிமாவில் புகை பிடிக்காமல் நடித்து இருந்தார்.
சிவகுமார் குறித்து:
சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் பல்வேறு சிரியல்களில் நடித்துள்ளார். தமிழில் வீட்டுக்கு வீடு வாசப்படி, பந்தம், சித்தி, அண்ணாமலை போன்ற பல்வேறு ஹிட் தொடரில் நடித்து இருக்கிறார். சிவகுமார் கால கட்டத்தில் வந்த பலர் இன்னமும் நடித்து வரும் நிலையில் நடிகர் சிவகுமார் பல ஆண்டுகளுக்கும் முன்னரே நடிப்பதை நிறுத்திவிட்டார். இறுதியாக இவர் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'பூவெல்லாம் உன் வாசம்' படத்தில் நடித்திருந்தார். அதே போல சன் தொலைங்கட்சியில் 2006 ஆம் ஆண்டு துவங்கி 2008 ஆம் ஆண்டு நிறைவடைந்த ‘லட்சுமி’ என்ற தொடரில் நடித்திருந்தார்.
பன்முகம் கொண்டவர்:
இவர் நடிகர் மட்டுமில்லாமல் ஓவியர், மேடைப் பேச்சாளர் என பல்வேறு முகங்களை கொண்டவர். யோகாவிலும் மிகப்பெரிய உயரத்தை தொட்டவர் சிவகுமார். இந்த வயதிலும் தன்னுடைய பிட்னஸ்ஸை யோகா மூலமே இவர் மெயின்டைன் செய்து வருகிறாராம். தூக்கத்தில் சினிமா சார்ந்த ஓவிய வேலைகளுக்காக இவர் திரைத்துறையில் நுழைந்த நிலையில் தான் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. சிவகுமாரின் ஓவியங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கூட வைரல் ஆக்குவதுண்டு.
சூர்யாவின் பதிவு:
இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா, தனது தந்தை சிவகுமார் செய்திருக்கும் சாதனையை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், 'ஆர்வம் கலையை காலமற்றதாக்குகிறது' வாட்டர் கலர் மற்றும் ஸ்பார்ட் பெயிண்டிங் மீதான என் அப்பாவின் தன்நலமற்ற காதல் இப்போது இந்திய அஞ்சல் துறையால் அஞ்சல் அட்டைகளாக அழியாமல் உள்ளது. இன்று இன்னும் திறமையாக இருக்கிறது அப்பா' என்று பதிவிட்டுள்ளார். அதோடு தனது தந்தையின் சில ஓவியங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
“Passion makes art timeless”. My dad’s selfless love for watercolor and spot painting is now immortalized as postcards by the Indian Postal Department. Even more proud today Appa. #ActorSivakumar #PostCards #1960s pic.twitter.com/Y6dBUfbtvA
— Suriya Sivakumar (@Suriya_offl) January 29, 2025
சூர்யா குறித்து:
நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் தான் சூர்யா. இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டு வருகிறார். தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் சூர்யா கடைசியாக 'கங்குவா' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை. தற்போது இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் 'சூர்யா 45 'போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் ரெட்ரோ திரைப்படம் வருகின்ற மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம்.