கண்ணுகளா செல்லங்களா என் சாமிகளா ரொம்ப நன்றி - எமோஷனலாக நடிகர் சூர்யா பேசி வெளியிட்ட வீடியோ

By subhashini · 17/5/2026

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. இந்த படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், திரிஷா, சுவாசிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். பல பிரச்சினைகளைத் தாண்டி கருப்பு படம் வெளியாகி இருக்கிறது.

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இது சூர்யாவிற்கு ஒரு கம்பேக்காக அமைந்து இருக்கிறது. சூர்யா ரசிகர்கள் கருப்பு படத்தை கொண்டாடி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சூர்யா அவர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

கருப்பு படம்:

அதில் அவர், கண்ணுங்களா செல்லங்களா சாமிகளா என் சாமிகளா முதலில் இந்த அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி. கருப்பு படம் திட்டமிட்டபடி 14-ஆம் தேதி வெளியாக முடியவில்லை. அதற்காக எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அந்த நேரத்தில் என்ன செய்வது என்றும் புரியவில்லை. ரொம்ப இக்கட்டான மனநிலையில் இருந்தோம். ஆனால், ரசிகர்கள் அனைத்து திசைகளில் இருந்தும் அனுப்பிய மெயில், வாய்ஸ் மெசேஜ்கள் தொலைபேசி அழைப்புகள் அனைத்துமே மிகப்பெரிய நம்பிக்கையும் உற்சாகத்தையும் கொடுத்தது.

சூர்யா வீடியோ:

அன்றைக்கே எல்லாத்தையும் புரட்டு போட்டு விடலாமே என்று தோன்றியது. நீங்கள் தான் எல்லாத்தையும் மாற்றி விட்டீர்கள். அதைத் தொடர்ந்து 15 ஆம் தேதி கருப்பு படம் வெளியான பிறகு திரையரங்கில் கிடைத்த வரவேற்பு பார்த்து வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. ரசிகர்கள் அளித்த அன்பு, மரியாதை, வரவேற்பு படக்குழுவிற்கு மிகப்பெரிய மகிழ்ச்சி கொடுத்திருக்கிறது. படத்தின் தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி.

View this post on Instagram

A post shared by Suriya Sivakumar (@actorsuriya)

ரசிகர்களுக்கு நன்றி:

எடிட்டர், ஒளிப்பதிவாளர் விஷ்ணு, இசையமைப்பாளர் சாய், இயக்குனர் ஆர் ஜே பாலாஜி, நடிகை திரிஷா மற்றும் முழு பட குழுவினர் சார்பாகவும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக இந்த படத்தை நம்பிக்கையுடன் தயாரித்து வெளியிட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆன பிரகாஷ் மற்றும் பிரபுவிற்கும் நன்றி. இறுதியாக இந்த அன்பு எனக்கு ரொம்பவே முக்கியமானது. கருப்பு படத்தை இவ்வளவு ஸ்பெஷலாக மாற்றிய அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full